தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரு தேசியப்பட்டியல் இடங்களுக்கும் சாந்தி சிறிஸ்கந்தராஜாவும், துரைரெட்ணசிங்கமும் நியமிக்கப்படவிருப்பதாக நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து இன்று தேர்தல் ஆணையாளருக்குத் தெரியப்படுத்தப்படும்.

தேசியப் பட்டியல் ஆசனங்களைக் கைப்பற்றிய ஏனைய கட்சிகள் தமது தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரங்களை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பியுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரங்கள் வெளியிடப்படாதிருந்தது.

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும், தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கு நியமிக்கப்பட வேண்டியவர்கள் தொடர்பான பரிந்துரைகள், கோரிக்கைகள், விடுக்கப்பட்டு வந்தது.

கடந்த இரு நாட்களாக இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் திருமலையில் கூடி ஆராய்ந்து வந்தன.

திருகோணமலை மாவட்டத்தில், இரா.சம்பந்தனுக்கு அடுத்து அதிகளவு விருப்பு வாக்குகளைப் பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் மற்றும் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு சில நூறு வாக்குகளால் வெற்றிவாய்ப்பை இழந்தசாந்தி சிறீஸ்கந்தராஜாவும், இந்த இடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், இந்நிலையில் தமிழரசுக் கட்சியின் சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்ட திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களும் தமிழரசுக் கட்சியின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்ட திரு. க. துரைரெட்ணசிங்கம் அவர்களும் தேசியப் பட்டியலுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெண் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா இலங்கை நிர்வாக சேவையசை் சேர்ந்தவர்.

உதவி திட்டமிடல் பணிப்பாளரான இவர். 1980களில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் புளொட் அமைப்பின் தொழற்சங்கப் பொறுப்பாளராக இருந்த வரதன் என்ற சிறீஸ்காந்தராஜாவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version