ஆட்டம் முடிந்து பரிசளிப்பு நிகழ்ச்சி நடக்கும்போது, சிறிசேனாவுக்கு மைக்கில் பேச வாய்ப்பு கிடைத்தது. அப்போது சங்ககாராவை புகழ்ந்து பேசிய சிறிசேனா, “இங்கிலாந்துக்கான இலங்கை தூதராக சங்ககாராவை நியமிக்க முடிவு செய்துள்ளேன்” என்று அறிவித்தார். இதுகுறித்து சங்ககாரா தனது முடிவை இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஓய்வுபெறும் சங்ககாரவை வாழ்த்த நேரில்சென்ற ஜனாதிபதியும் பிரதமரும் (படங்கள்)
கொழும்பில் இன்று நடைபெற்ற இலங்கை க்கும் இந்தியாவுக்கும் இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி குமார் சங்ககராவின் இறுதி சர்வதேச கிரிக்கட் போட்டியாக அமைந்த நிலையில் அவருக்கு அங்கு நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நேரில் சென்று அவரை பாராட்டி கௌரவித்துள்ளனர்.
இந்த நிகழ்வில் குமார் சங்கக்காரவை பிரித்தானியாவுக்கான இலங்கை உயரிஸ்தானிகராக பதவியேற்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி அவருக்கு அங்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கும் போதே குமார் சங்கக்காரவிடம் ஜனாதிபதி இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
சங்கக்கார கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றாலும் அவரின் சேவை தொடரும் வகையில் பிரித்தானியாவுக்கான உயரிஸ்தானிகராக பதவியேற்க வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கின்றோம். என ஜனாதிபதி சங்கக்காரவிடம் தெரிவித்துள்ளார்.