சென்னை: தமிழ்நாடு காங்கிரஸின் அடுத்த புதிய தலைவராக குஷ்பு தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக காங்கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செயற்பட்டு வருகிறார். இன்னும் மூன்று மாதத்தில் இளங்கோவனை மாற்றிவிட்டு புதிய தலைவரை நியமிக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

புதிய தலைவராக வர வாய்ப்புள்ளவர்கள் பட்டியலில் குஷ்பு பெயரும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

மோடி ஜெயலலிதா சந்திப்பு குறித்து இளங்கோவனின் சர்ச்சைக்குரிய விமர்சனம், காமராஜர் அரங்க வணிக வளாக நிதி முறைகேடு உள்ளிட்ட புகார்களில் சிக்கியுள்ள இளங்கோவனுக்கு தலைமேல் எப்போதும் கத்தி தொங்கிவருகிறது.

மேலும் தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் தமிழக காங்கிரஸ் தலைமையை மாற்றிவிட்டு தொண்டர்களுக்கு புது இரத்தம் பாய்ச்சும் முடிவில் மேலிடம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எனவே, தமிழக பா.ஜ.க. வுக்குத் தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் உள்ளது போன்று தமிழக காங்கிரஸுக்கு பெண்ணான குஷ்பு நியமிக்கப்படலாம் என்று டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Share.
Leave A Reply

Exit mobile version