தனது தோளில் குழந்தையைத் சுமந்ததவாறு பேனா விற்பனை செய்யும் ஒரு சிரிய அகதியின் புகைப்படம் இவ்வாரம் முழுவதும் சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.
மனதை உருக்கும் குறித்த புகைப்படத்தில் தூங்கும் தனது குழந்தையை தோளில் சுமந்தவாறு சிரியாவைச் சேர்ந்த அகதி ஒருவர் தெருவில் பேனா விற்கின்றார்.
Abdul-and-Reem0சுமார் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோரால் பகிரப்பட்ட குறித்த படத்தை ட்விட்டரில் பகிர்ந்தவர் Gissur Simonarson என்பவராவார். ()
குறித்த தந்தை லெபனானில் பெய்ரூட்டில் உள்ள வீதி ஒன்றில் பேனா விற்பனையில் ஈடுபட்டிருந்தபோது இந்தப் புகைப்படம் பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த படத்தை பதிவேற்றிய Gissur Simonarson குறித்த நபருக்கு புது வாழ்வளிக்குமாறு கோரி ஆரம்ப கட்டதொகையாக $ 5,000 எனும் இலக்கை மையமாகக் கொண்டு #BuyPens எனும் ஹேஸ்டேக்கில் பிரசாரமொன்றை முன்னெடுத்தார்.

இதயத்தை உருக்கும் இந்தப் புகைப்படத்தை டுவிற்றரில் பார்த்த பலரும் அந்தத் தந்தைக்கு உதவ முன்வந்தனர்.
ஆனால் இந்த பிரசாரம் தொடங்கி 30 நிமிடங்களிலேயே குறித்த இலக்குத் தொகையிலும் அதிகமான தொகை வந்து சேர்ந்துள்ளது.
அதனை அவரிடம் ஒப்படைக்கும் பணியை ஆரம்பித்த Gissur Simonarson லெபனானைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள், ஊடகவியலாளர்கள், சமூகஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரின் உதவியுடன் அந்தத் தந்தையை கண்டுபிடித்தார்.
அப்துல்லா எனும் பெயருடைய இவர் தனது மனைவியை இழந்து தனிமையில் வாழ்வதோடு, தனது இரண்டு பிள்ளைகளை தானே வளர்த்து வருகின்றார். 9 வயதான அப்தலில்லாஹ் மற்றும் 4 வயதான ரீம் ஆகிய இரு பெண் குழந்தைகளின் தந்தையாவார்.
பலஸ்தீனியரான இவர் சிரியாவில் வசித்து வந்துள்ளார். யுத்தம் காரணமாக தனது குழந்தைகளுடன் டமஸ்கஸிலிலுள்ள யர்மோக் அகதிமுகாமில் தஞ்சம் புகுந்துள்ளார்.
ஆயினும் தனது அன்றாட வாழ்க்கையை நடாத்துவதற்கு பிச்சை எடுக்காது சுயதொழில் ஒன்றைச் செய்யும் எண்ணத்தில் டமஸ்கஸிலிருந்து 80 மைல் தூரத்திலுள்ள பெய்ரூட் வரை இவர் பேனா விற்பனையில் ஈடுபட்டு வருகின்றார்.
இதுவரை இவருக்கு சுமார் $ 42,000 தொகை சேகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share.
Leave A Reply

Exit mobile version