8 வது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நேற்று இடம்பெற்றது.பல முக்கிய நிகழ்வுகள் இதன்போது இடம்பெற்றிருந்தன.
இதன்போது பலரது கவனத்தினையும் ஈர்த்த நிகழ்வுகளில் ஒன்றே முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சபையில் உறங்கியமையாகும்.
அவர் இவ்வாறு உறங்குவது புதிய விடயமல்ல எனினும் முதலாவது அமர்விலேயே இவ்வாறு செய்தமை பலரது விமர்சனத்துக்கும் உள்ளாகியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் அடுத்த ஆசனத்தில் அமர்ந்திருந்த அவர் உறங்கியமை கமெராக்களிலும் சிக்கியுள்ளது.
நிமல் சிறிபால அரசியல் மேடைகள் மற்றும் நிகழ்வுகளில் தூங்கி விழுவதற்கு பெயர் போனவர் என்பது குறிப்பிடத்தக்கது.