இந்தியாவின் , பெங்களூரில் 13-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண் தற்கொலைக்கு முன் 89 இணையத்தளங்களை பார்வையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரை சேர்ந்த இஷா வயது 26  இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுமார் 8.30 மணி அளவில் பெங்களூரில் உள்ள 13 மாடி கொண்ட அடுக்குமாடு குடியிருப்பின் மேலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்  அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்கொலையிலேயே எது சிறந்தது என்று அது எப்படி என்பது குறித்து கடந்த 2 நாட்களாக தனது ஸ்மார்ட் போன் மூலம் 89 இணையதளங்களை அவர் பார்த்துள்ளார்.

தற்கொலை செய்தவதற்கு முன்னர் பெங்களூரில் உள்ள பல்வேறு மாடிக்குடியிருப்புகளுக்கு சென்று பார்த்துள்ளார் கடைசியாக ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் ஷோபா கிளாசிக் என்ற 13 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் மேலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட இடத்தில்  இஷாவின் கைப்பைக்குள், போதை மாத்திரை, 250 கிராம் கஞ்சா இருந்ததை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இஷாவுக்கு ஒரு காதலனும், 2 தோழிகளும் மிக நெருக்கமாக இருந்துள்ளனர். அடிக்கடி அவர்களுடன் கையடக்கத்தொலைபேசியில் பேசியுள்ளார். அவர்களிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version