சிரியாவில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக, ஐரோப்பாவிற்கு சென்று தஞ்சம் புகுவதற்காக, லட்சக்கணக்கான அகதிகள் கடல் வழியாக பாதுகாப்பற்ற பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அதில் ஒருவன்தான் மூன்று வயதே ஆன ஐலன். அவனோடு சேர்ந்து அவன் தாயும் 5 வயது அண்ணனும் நீரில் மூழ்கி இறந்தனர்.
இந்த நிலையில், 3 வயது குழந்தையான ஐலன், கடற்கரை மணலில் முகம் புதைத்தபடி, வெறும் சடலமாகக் கிடக்கும் புகைப்படம், உலகின் கள்ள மௌனத்தை அசைத்து பார்க்கத் துவங்கியுள்ளது.
இந்த கொடூர சம்பவம் நடந்த துருக்கியின் போட்ரம் மாவட்டம், கடல் கடந்து வரும் அகதிகளின் சந்திப்பு புள்ளியாக உள்ளது.
இங்குள்ள அகியர்லார் கடற்கரையில், கடந்த புதன்கிழமை காலை 6 மணியளவில் நிலுபர் டெமிர் என்ற பெண் புகைப்பட-நிருபர் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.
இந்நிலையில் இறந்த மூவரின் உடலும், அவர்களது சொந்த ஊரான சிரியாவின் கொமானியில் இன்று அடக்கம் செய்யப்பட்டது.
இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் குடும்பத் தலைவரான அப்துல்லா கதறி அழுதபடி, தன் குடும்பத்தினரின் உடல்களை வலம் வந்த காட்சி, அங்கு கூடியிருந்தவர்களை விம்மி அழ வைத்தது.
எல்லையை கடந்தது குறித்து இறந்த குழந்தையின் தந்தையான அப்துல்லா குர்தி கூறுகையில், “என்னுடைய குடும்பத்தின் மரணம் அரபு நாடுகள் சிரிய அகதிகளுக்கு உதவ வைக்கும் என்று நம்புகிறேன்.” என்று பிற அகதிகளின் உயிர் காக்கும் அக்கறையுடன் கண்ணீர் சிந்தினார்.
Mother Reham Kurdi, pictured holding her 3-year-old son Aylan, also died when the boat sank