சிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் இணைந்து ரெஸ்டாரண்ட் ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த ரெஸ்டாரண்டுக்கு ஆக்ரா மக்களிடையே அமோக வரவேற்பு காணப்படுகிறது.

ஆக்ரா நகரில் தாஜ்மஹால் அருகே ‘ஷீரவுஸ் ‘ என்ற பெயரில் இரண்டு அடுக்கு ரெஸ்டாரண்ட் ஒன்று உள்ளது. அழகிய வேலைப்பாடுகளும், அமைதியும், இசையும் தவழும் இந்த ரெஸ்டாரண்ட்டுக்குள், தங்கள் வாழ்க்கையில் பூகம்பத்தையே சந்தித்த பெண்கள் மட்டுமே நிரம்பியிருக்கின்றனர். அவர்களின் முகம் சிதைந்து போயிருந்தாலும், தன்னம்பிக்கை சிதையவில்லை.

acid3இந்த ரெஸ்டாரண்டில் பணியாற்றும் அத்தனை பெண்களும், ஆசிட் வீச்சால் முகம் கருகிப் போனவர்கள். ஆனால் அவர்களின் வாழ்க்கை கருகி போகாமல் இருக்க, தற்போது இந்த ரெஸ்டாரண்ட்தான் உதவியாக இருக்கிறது.

டெல்லியை சேர்ந்த, சான்வ் அறக்கட்டளை  ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் இது போன்ற ரெஸ்டாரண்ட் நடத்தும் ஐடியாவை வழங்கி, அதற்கான நிதியுதவியும் அளித்தது.

அந்த பெண்களின் அயராத உழைப்பினால் இந்த ரெஸ்டராடண்ட் தற்போது ஆக்ராவின் அடையாளங்களுல் ஒன்றாகி விட்டது . இந்த ரெஸ்டாரண்டில் பணிபுரியும், 1992ஆம் ஆண்டு ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட நீத்து கூறுகையில், ”என்னால் சரியாக பார்க்க முடியாது.ஆனால் இந்த ரெஸ்டாரண்ட் என்னை போன்றவர்களுக்கு இன்னொரு வாழ்க்கையை தந்துள்ளது ” என்கிறார் தன்னம்பிக்கையுடன்.

பொதுவாக ஆசிட் வீச்சால் பாதிக்கப்படும் பெண்கள் சந்திக்கும் துன்பங்களை விளக்க வார்த்தைகளே கிடையாது. முகம் சிதைந்து, கண் பார்வை இழந்து தவிக்கும் அவர்களது மனநிலை, அத்தனை வேதனையில் தவிக்கும். இத்தகைய மனநிலையில் இருந்து, ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வருவதே பெரிய விஷயம். பெரும்பாலானவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி விடுவார்கள்.

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் அப்படி முடங்கி விடக்கூடாது என்பதற்காகத்தான், இது போன்றதொரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது இந்த ரெஸ்டாரண்டில் 5 பேர் வேலை செய்கின்றனர். அதில் ஒருவரான ரூபா, ” எங்கள் ரெஸ்டாரண்டுக்கு மக்கள் அளித்து வரும் அமோக ஆதரவை மறக்க முடியாது. முதலில் எங்களை பார்த்து தயங்கினார்கள். எங்களை கண்டு குழந்தைகள் பயப்பட்டன. ஆனால் போகப் போக பழகி விட்டனர். இப்போது ஆக்ரா மக்களுக்கு நாங்கள் உணவளிக்கும் தேவதைகள்” என்கிறார்.

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட, பெண்களே நடத்தும் ரெஸ்டாரண்ட்டுகள் நாட்டின் பல பகுதிகளில் விரைவில் திறக்கப்படவுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version