வவுனியா வாரிக்குட்டியூர் 06ம் யுனிட்டில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையிலேயே அதி உயரத்தை உடைய 27 அடி உயரம் கொண்ட ஐயனார் விக்கிரகம் திறந்து வைக்கப்பட்டுள்ளதோடு கும்பாவிஷேகத்துடன் கூடிய தரிசிப்புக்கான திறப்புவிழா இன்று திங்கட்கிழமை(7) வைபவ ரீதியாக இடம் பெற்றது.
12
சிவஸ்ரீ பால கிருஷ்ணமூர்த்தி குருக்கள் தலைமையில் நடத்தப்பட்ட இந்த விழாவில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,

வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.தியாகராசா, வடக்கு கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் மகேந்திரம் ரகு, வாரிக்குட்டியூர் ஐயனார் ஆலய பரிபாலனசபையினரும்,  வாரிக்குட்டியூர் கிராம மக்களும் இணைந்து கலந்து கொண்டதோடு சிற்பாசிரியர்களையும் கௌரவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version