திவுலப்பிட்டிய – கொட்டதெனியாவ பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை காணாமல் போன நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்ட சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டு பின் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி தலைமையில் இன்று இடம்பெற்ற மரண பரிசோதனையின் போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டதெனியாவயில் காணாமற்போன சிறுமி சடலமாக கண்டெடுப்பு- (வீடியோ)kulanthaiaa

கம்பஹா – திவுலுபிட்டிய – கொட்டதெனிய பிரதேசத்தில் காணாமல் போன சிறுமி, சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது வீட்டுக்கு அருகில் உள்ள விகாரை ஒன்றுக்கு பின்னால் போதி மரம் ஒன்றின் அருகில் இருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று முனதினம் இரவு தமது பாட்டியுடன் உறங்கிய குறித்த சிறுமி, நேற்று காலை விடியும் போது காணாமல் போய் இருந்தார்.

இந்த நிலையில் அவரை மூன்று காவற்துறை குழுவினர் தேடி வந்தனர்.

இந்த நிலையில் குறித்த சிறுமியின் வீட்டில் இருந்து 300 மீற்றர் தொலைவில் உள்ள அரவிந்தவத்த எனும் இடத்தில் இருந்து சடலம் மீட்கப்பட்டது.

சடலம் மீட்கப்படும் போது உடை கலைக்கப்பட்டிருந்ததாகவும் இது அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை தோற்றுவித்திருப்பதாகவும், நடப்பு காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version