தம்பதியொருவரின் திருமண விருந்து வைபவத்தின் நடனத்தின்போது, மணமகனை மணமகள் அந்தரத்தில் “மிதக்க” வைத்து காட்டிய சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
மெஜிக் நிபுணரும் நகைச்சுவையாளருமான ஜஸ்டின் வில்மன் மற்றும் புகைப்படக்கலைஞரான ஜிலியன் சிப்கின்ஸும் அண்மையில் திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களின் திருமண விருந்து வைபவம் கலிபோர்னியா மாநிலத்தின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.
இந்நிகழ்விலும் ஆயிரக்கணக்கான விருந்தினர்கள் முன்னிலையில் மெஜிக் சாகசமொன்றை இத்தம்பதியினர் நிகழ்த்திக் காட்டினர்.
ஆனால், இதற்காக தாம் இருவரும் பல மணித்தியாலங்கள் பயிற்சிகளை மேற்கொண்டதாக ஜஸ்டின் வில்மன தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வு தாம் எதிர்பார்த்ததைவிட சுவாரஷ்யமாக இருந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.