பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருவரும், பாசிக்குடாவிலுள்ள ‘சண் அன்ட் ஃபண்’ ஹோட்டலில் வைத்து, நேற்று இரகசியச் சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுமுறைக்காக இருவரும் அங்கு சென்றிருந்ததாகவும் அங்கு வைத்தே இந்தச் சந்திப்பு நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுவதோடு இச்சந்திப்பைத் தவிர, வேறுபல இரகசிய அரசியல் சந்திப்புகளும் இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பான உத்தியோகபூர்வமான அறிவிப்பேதும் வெளியாகியிருக்கவில்லை.
கோட்டாபய, நாமல் நிதி குற்ற விசாரணைப் பிரிவில்
நிதிக் குற்றங்கள் தொடர்பான காவல்துறையின் சிறப்பு விசாரணைப் பிரிவுக்கு இன்று காலை அழைக்கப்பட்டிருந்த கோட்டாபய ராஜபக்ஷவிடம் பொலிசார் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
ராஜபக்ஷ குடும்பத்தின் சொந்த ஊரான மெதமுலனவில் டி.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியகம் கட்டப்பட்டபோது, நடந்துள்ள 90 மில்லயன் ரூபாவுக்கும் அதிகமான பணப்பரிமாற்றம் தொடர்பிலேயே கோட்டாபய ராஜபக்ஷ விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக காவல்துறை தகவல்கள் கூறுகின்றன.
இதற்கு முன்னரும் வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவின் சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷ இங்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, முன்னாள் ஜனாதிபதியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவும் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார்.
சட்டவிரோதமான முறையில் நிதிசேகரித்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.