உலகத்தில் ஒரே மாதிரி காட்சியளிக்கும் ஏழு நபர்கள் இருப்பார்கள் என்று பல காலமாக கூறுவது உண்டு. அதே போல நாமும் பலமுறை இணையங்களிலும், பத்திரிக்கைகளிலும் நிறைய பேரை பார்த்திருப்போம்.
ஆனால், பிரபலமான மக்களின் உருவத் தோற்றம் கொண்டுள்ளவர்களை இது போல பார்க்கும் போது தான் நமக்கே ஆச்சரியமாக இருக்கும்.
அந்த வகையில் நமது இந்தியாவின் பிரபல அரசியல்வாதிகளும், அரசியல் கட்சி சார்புடையவர்கள், அரசியல் பதவி வகித்தவர்கள் போன்று உருவத் தோற்றத்தோடு ஒத்துப்போகும் சாமானிய மக்களை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். இம்மியளவும் வேறுபாடு இன்றி இவர்கள் காட்சியளிப்பது உண்மையிலேயே அபூர்வமாக தான் இருக்கிறது…

_Al-Aqsa_mosque_3_3438332b

நரேந்திர மோடி
இந்திய பிரதம மந்திரியை போலவே காட்சியளிக்கிறார் இவர். கடந்த தேர்தலின் போது இவரும் பல இடங்களுக்கு சென்று மக்களை ஆச்சரியப்படுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்துல் கலாம்
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் போலவே காட்சியளிக்கிறார் இவர்.
மன்மோகன்சிங்
இந்தியாவின் முன்னால் பிரதம மந்திரி மன்மோகன்சிங் போலவே காட்சியளிக்கிறார் இவர். இதற்கு முக்கிய காரணம் இவரது தலைப்பாகை தான்.
பால் தாக்கரே
சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரே. இவர் கடந்த 2012 ஆண்டு இறந்துவிட்டார். பால் தாக்கரே போலவே காட்சியளிக்கிறார் இவர்.
காந்திஜி
காந்திஜி போல அலங்காரம் செய்துக் கொண்டு உலா வருவோரை நாம் ஒவ்வொரு குடியரசு, சுதந்திர தினத்தன்று பார்க்கலாம். ஆனால், இவர் எந்த அலங்காரமும் இன்றியே காந்தியை போல தான் இருக்கிறார்.
சாமியார் ராம்தேவ்
வட இந்தியாவில் மிகவும் பிரபலமான சாமியார் ராம்தேவ் பாபா போலவே இருக்கிறார் இவர். நீண்ட கூந்தலும், அடர்த்தியான தாடியும் அச்ச அசல் ராம்தேவ் பாபா போலவே இவர் தோற்றமளிக்க வைக்கிறது.
கருணாநிதி – எம்.ஜி.ஆர் அலங்காரம் செய்துக் கொண்டு ஒருவரை போல அச்ச அசல் நிறைய பேர் வர முடியும் என்றால் அது, கருணாநிதி – எம்.ஜி.ஆர் தோற்றமாக தான் இருக்க முடியும். இன்று வரை தேர்தல் நாட்களில் அதிகம் வேடமிட்டு அமர்க்களம் செய்வது இவர்களது உருவ தோற்றத்துடன் இருப்பவர்கள் தான்.
Share.
Leave A Reply

Exit mobile version