மும்பை: திரைத்துறையைப் பொறுத்த வரை நல்ல நண்பர்கள் என்றால் உறவு கொள்ளும் நண்பர்கள் என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
பி கிரேட் படங்கள் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆனவர் கங்கனா ரனாவத். நடிக்க வந்த புதிதில் கள்ளத் தொடர்பு அது இது என சர்ச்சைகளில் சிக்கி தனது பெயரை கெடுத்துக் கொண்டார்.
அதன் பிறகு தான் நடிப்பில் கவனம் செலுத்தத் துவங்கினார். அவரது நடிப்புத் திறமைக்கு ஏற்ற கதாபாத்திரங்கள் கிடைத்ததால் இன்று பாலிவுட்டின் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ளார்.14-1442231312-kangana-ranaut354-600
கங்கனா
கங்கனா ரனாவத் நடிப்புக்கு மட்டும் பெயர் போனவர் அல்ல. பேட்டி அளிக்கையில் மனதில் பட்டதை மறைக்காமல் படார் என தெரிவித்துவிடுவார். அவரை பேட்டி காணச் செல்லும் போது எல்லாம் பரபரப்புக்கு குறைவிருக்காது.
நல்ல நண்பர்கள்திரைத் துறையில் உள்ளவர்களிடம் நீங்கள் இருவரும் காதலர்களா என்று கேட்டால், ச்சீ, ச்சீ நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் ஆக்கும் என்பார்கள். இந்நிலையில் திரைத்துறையில் உள்ளவர்கள் கூறும் நல்ல நண்பர்களின் அர்த்தத்தை தெரிவிக்குமாறு கங்கனாவிடம் கேட்கப்பட்டது.

அதிரடி
திரைத்துறையை பொறுத்த வரை நல்ல நண்பர்கள் என்றால் செக்ஸ் வைத்துக் கொள்பவர்கள் என்று அர்த்தம் என கங்கனா படாரென்று பதில் அளித்துள்ளது பலரையும் அதிர வைத்துள்ளது.
வேண்டாம்
கங்கனா இவ்வாறு தெரிவித்துள்ளது பாலிவுட்டில் பலருக்கு பிடிக்கவில்லை. அதனால் பாலிவுட்டின் பெரிய தலைகள் பலரும் கங்கனாவுடன் சேர்ந்து நடிக்க மறுக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
Share.
Leave A Reply

Exit mobile version