பிரிட்டனைச் சேர்ந்த நபர் ஒருவர், அதிக எண்ணிக்கையான வயாக்ரா குளிசைகளை உட்கொண்டதையடுத்து, தொடர்ச்சியாக 5 நாட்கள் அவரின் ஆணுறுப்பு எழுச்சியடைந்த நிலையில் இருந்ததால் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளார்.
37 வயதான டேனியல் மெட்போர்த் எனும் இந்நபர், வீட்டிலிருந்து வெளியில் சென்றிருந்த வேளையில், மதுபோதையில் ஒரு மணித்தியாலத்தில் 35 வயாக்ரா குளிசைகளை உட்கொண்டாராம்.
அதையடுத்து தனக்கு சுகயீனம், தலைச்சுற்று ஏற்பட்டதாகவும் பிரமையான உணர்வுகள் ஏற்பட்டதாகவும் டேனயில் மெட்போர்த் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனது ஆணுறுப்பு தொடர்ச்சியாக எழுச்சியடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
5 நாட்கள் வரை இந்நிலை நீடித்ததால் தான் பெரும் சங்கடங்களை எதிர்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
பின்னர் தான் வீடு திரும்பியவுடன் தனது துரோகத்தனமான நடவடிக்கை குறித்தும் அதிக எண்ணிக்கையான வயாக்ரா குளிசைகளை உட்கொண்டதையும் தனது மனைவியிடம் ஒப்புக்கொண்டார்.
அதன்பின் அவரின் மனைவி அம்பியூலன்ஸை வரவழைத்து டேனியலை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றாராம்.
மருத்துவர்கள் இவ்விடயம் குறித்து மிக தொழிற்சார் ரீதியில் நடந்துகொண்டனர். எனது மனைவி என்னை மன்னித்துவிட்டார்.
இந்த நீண்ட நேர எழுச்சி எனக்கு உதவவில்லை” என டேனியல் தெரிவித்துள்ளார்.
அதிக எண்ணிக்கையான வயாக்ரா குளிசைகளை பயன்படுத்துவதால் வழக்கத்துக்கு மாறான இதயத்துடிப்பு, நெஞ்சுவலி போன்றவை ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.