பாலுறவு என்பது பல்வேறு மதத்தினராலும் மிகவும் பேசப்படும் விஷயமாக உள்ளது. இந்த உணர்வும், அன்பை பரிமாறிக் கொள்ளும் விதமும் புனிதமான மத உலகிலிருந்து நம்மை விலக்கி வைத்துவிடக் கூடும் என்று உலகின் பல்வேறு மதங்களும் போதனை செய்து வருகின்றன.ஆனால், மற்றொரு பக்கத்தில் பார்த்தால், உண்மையான பரம்பொருளை உணருவதற்கு மிகவும் உறுதியான, முக்கியமான வழியாக பாலுணர்வை குறிப்பிடுகின்றனர்.

உடலுறவு எப்படி உடலை வலுவாக்குகிறது? இந்தியாவில் நாம் பாலுணர்வு பற்றிய பேச்சை எடுத்தால், முதலில் நினைவுக்கு வருவது காம சூத்ரா தான்.

பாலியல் நிலைகளை அல்லது நிர்வாண நிலைகளை காட்டக் கூடிய ஒரு புத்தகமாகவே இந்த நூல் பலராலும் பார்க்கப்படுகிறது.

ஆனால், இது நிர்வாண நிலைகளை மட்டுமே காட்டக் கூடிய ஒரு புத்தகமல்ல என்பது தான் உண்மை. இந்த எழுத்துக்களின் உண்மையான அர்த்தம் உடல் ரீதியான பார்வைகளிலிருந்து மிகவும் அப்பாற்பட்டதாகும்.

15-1416033196-1kamaஇன்பங்களை வழிகாட்டும் காமசூத்ரா புத்தகம்
பாலுணர்வு என்பது ஒரு புனிதமான மறுவாழ்வும், உருவாக்கமுமாகும். ஆண் மற்றும் பெண் கோட்பாடுகள் ஒன்றிணையும் ஆதர்ஷ இடமும் இதுவே.இந்த அன்பின் கலை, சிற்றின்பம் மற்றும் வாழ்வின் இன்பங்களை காட்டும் ஒரே வழிகாட்டும் புத்தகம் காம சூத்ரா ஆகும். இதிலுள்ள 64 கலைகளும் நல்ல மனைவிக்கான வழிகள் இல்லையென்றாலும், ஒரு பெண்ணால் அப்பழுக்கற்ற வகையில், திறமையாக, புரிந்துணர்வுடன், அழகாக மற்றும் புத்திசாலித்தனமாக செயல்படச் செய்யும் வழிகாட்டல்களே ஆகும்.
இன்பத்தை வெளிப்படுத்தும் வழிமுறைகள்

விலங்குகளைப் பொறுத்த வரையில், பாலுணர்வுக்கான சக்தி உடலின் ஆக்கத்தைப் பொறுத்ததாகும். மனிதர்களைப் பொறுத்த வரையில், அது உடல், மனம் மற்றும் உடலியல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். எனவே, கவர்ச்சி, எழுச்சி, விழிப்புணர்வு, ஆர்வம், அக்கறை, உற்சாகம் அல்லது புனைவு திறன் ஆகிய அனைத்து நிலைகளிலுமே நம்முடைய பாலுணர்வு திறன் செயல்படக் கூடும்.

காம சூத்ராவில் நம்முடைய சக்தியை கவனமாக, மகிழ்ச்சியாக உணரும் வகையில் மற்றும் பெரிய நோக்கங்களுடன் வெளிப்படுத்தச் செய்யும் வழிமுறைகள் சொல்லித் தரப்படுகின்றன.

 

காமசூத்ராவின் படைப்பு
வேதங்களை அடிப்படையாகக் கொண்டு காம சூத்ரா படைக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது.
அன்பின் கோட்பாடுகள் பற்றிய முதல் நுலான காம சாஸ்திராவை எழுதியவராக சிவ பெருமானுடன் இருக்கும் நந்தி கருதப்படுகிறார்.
பின்னர், கி.மு. முதலாம் நூற்றாண்டு முதல் கி.மு. ஆறாம் நூற்றாண்டு வரை வாத்ஸாயன முனிவரால் எழுதப்பட்டும், பாதுகாக்கப்பட்டும் வந்திருக்கிறது.
மனித வாழ்க்கை பற்றி எடுத்துச் சொல்லும் முதல் 3 நூல்களில் ஒன்றாக காம சாஸ்திராவும் ஒன்று என்பது தான் இங்கே ஆர்வமூட்டும் செய்தியாகும்.
ஒழுக்கம் மற்றும் வாழ்க்கை முறையைப் பற்றிக் கூறும் தர்மா சாஸ்திரமும், பொருட்செல்வத்தைப் பற்றிக் கூறும் அர்த்த சாஸ்திரம் ஆகியவை முதல் இரண்டு நூல்களாகும்.

காமம் வாழ்க்கையின் 3-வது குறிக்கோளாக கருதப்படுகிறது. கேட்டல், உணருதல், பார்த்தல், ருசித்தல் மற்றும் முகர்தல் ஆகிய ஐந்து அறிவுகளையும் மனம் மற்றும் ஆத்மாவின் உதவியுடன் ஒருங்கிணைத்து முறையான வேறொன்றுடன் அனுபவிப்பதையே காமம் என்று சொல்லலாம். (காம சூத்ரா, 1883)

பேரின்பத்தை அடையும் வழியைச் சொல்லும் காமசூத்ரா
உடல் ரீதியாக இணையும் போது, உடல் மற்றும் உணர்வின் சந்திப்பு நடக்கும்.
எனவே, இந்த ஆசையானது புனிதமாகவும் மற்றும் கற்புடையதாகவும் இருக்கும். பல்வேறு விளையாட்டுகள் மூலம் தெய்வீக பேரின்பத்தை அடையும் வழியை நோக்கி காம சூத்ரா வழி நடத்துகிறது.
தேவைக்கான காமமாக இல்லாமல், விளையாட்டுகள் நிறைந்த காமமாக இருந்தால் அது பரவச நிலையை கொடுக்கும். அவள் அல்லது அவனுடைய பாலியல் தேவையை அடக்கி வைத்தால், அது மனிதர்களின் மன நிலையில் பிரச்னைகளை ஏற்படுத்தி, வாழ்வில் அதிருப்தியை உண்டாக்கும்.

குரு தீபக்கின் கூற்று,
“செக்ஸ், நியூரோசிஸ், டிவியன்ஸி, தவறான பாலியல் பழக்கங்கள், வன்முறை, தவறாக பயன்படுத்துதல், கண்டறியப்பட்ட எதிர்ப்புகள், அடக்கி ஆளுதல் மற்றும் ஒடுக்குதல் ஆகிய அனைத்து பிரச்சனைகளுமே செக்ஸிக்கான தூண்டுதல்கள் கிடையாது.நம்முடைய தூண்டுதல்களை, ஆசைகள் மற்றும் உணர்வுகளை புற தலையீடுகளின்றி, நாம் அறிந்து கொள்ளச் செய்தால், அவை தீவிரமான நிலைகளை அடைவதில்லை.

தீவிரவாதம், அது எந்த நிலையில் இருந்தாலும் அது ஒடுக்குமுறை, தடை மற்றும் அடக்குமுறை ஆகியவற்றின் பதிலாகவே இருக்கும். வன்முறையும், ஆக்கிரமிப்பும், பயம் மற்றும் முடியாத நிலையின் நிழல்களே” என்கிறார் தீபக் சோப்ரா என்ற குரு.

மகிழ்ச்சியின் மற்றொரு பக்கத்தை சொல்லும் காமசூத்ரா
இந்த அற்புதமான நூலிலுள்ள பாலியல் நிலைகளை நாம் இன்னமும் ஆழமாக சென்று பார்த்தால், ஒவ்வொரு நிலைக்கும் உள்ள புனிதமான சக்தியைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும்.

எனவே, நாம் நினைத்துக் கொண்டிருப்பதைப் போலல்லாமல், மிகவும் மாறுபட்ட கண்ணோட்டத்திலேயே காமசூத்ராவைப் பார்க்க வேண்டும். மகிழ்ச்சியின் மற்றொரு பக்கத்தையும், அதை அனுபவிக்கும் விதத்தையும் இங்கே நீங்கள் பார்க்க வேண்டும். இதன் வழியாக மட்டுமே நீங்கள் இறுதியான புனித நிலையை அனுபவிக்க முடியும்.

Share.
Leave A Reply

Exit mobile version