கொட்டாவை முதல் மொரகஹேன நோக்கி பயணிக்கும் (129 இலக்கம்) பஸ்ஸில் பயணித்த மாணவியை ரகசியமாக படம் பிடித்த நபரொருவர் சக பயணிகளால் பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபரை நையப்புடைத்த பொதுமக்கள் , அவரின் கழுத்தில் துஷ்பிரயோகக்காரர் என எழுதிய அட்டையையும் மாட்டி கம்பமொன்றிலும் பொலிஸ் வரும் வரை கட்டிவைத்துள்ளனர்.
பதின்மூன்று வயதான மாணவியொருவரையே குறித்த நபர் படம்பிடித்துள்ளார். இவர்படம் பிடிப்பதை மாணவர்கள் இருவரே கண்டுள்ளனர்.