கடுவலை – கடவத்த அதிவேக வீதி நேற்று மாலை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்ட நிலையில் அதற்கான திறப்பு விழா நடத்தப்படுவதற்கு முன்னரே பெண்கள் இருவர் அங்கு நாடடாவை வெட்டி வீதியை திறந்து வைத்தமையினால் அங்கு குழப்ப நிலையொன்று ஏற்பட்டிருந்தது.

கொழும்பு வெளிநோக்கிய சுற்றுவட்ட அதிவேக பாதையின் கடுவெலையிலிருந்து கடவத்தை வரையான பகுதி நேற்று திறந்து வைக்கப்பட்ட து. பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் பிற்பகல் 3 மணியளவில் இது திறந்து வைக்கப்பட்ட து.

எனினும்  பெருந்தெருக்கள் அமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளினால் அந்த வீதியை திறந்து வைப்பதற்கான நிகழ்ச்சிகள்  ஆரம்பமாகுவதற்கு (அமைச்சருக்கு வருவதற்கு)   முன்னர் நாடாவை வெட்ட முயன்ற பெண்கள் இருவரால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அப்பெண்கள் மஹிந்தவின் பட த்தை தூக்கிப் பிடித்தவாறு ‘மஹிந்த மாத்தயாட்ட ஜயவேவா’ (இது மஹிந்தவின் வீதி)என கோஷம் எழுப்பியுள்ளனர். பின்னர் பொலிஸார் அவர்களை அவ்விட த்திலிருந்து அப்புறப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து அவர்களால் வெட்டப்பட்ட நாடாவை மீண்டும் ஒட்டவைத்து அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளினால் அந்த வீதி திறந்து வைக்கப்பட்டது.

00111

ஒன்பது கிலோ மீற்றர் தூரம் கொண்ட கடுவெலையிலிருந்து கடவத்தை வரையான பாதை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்ட பின்னர் இரவு 9.00 மணியளவில் பொதுமக்கள் பாவனைக்காக வழங்கப்பட்ட து.

இதன் காரணமாக கடுவெல நகரில் ஏற்படுக்கூடிய போக்குவரத்து நெரிசல்  குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது

Share.
Leave A Reply

Exit mobile version