கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த புகையிரத்தடன் குறித்த யானை மோதியுள்ளது.
விபத்து இடம்பெற்ற பகுதியிலிருந்து சுமார் 100 மீட்டர் தூரம் வரை சென்றே குறித்த யானைஉயிரிழந்துள்ளது.
வவுனியாவில் விபத்தில் மூவர் காயம்
வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் இன்று (18.09) இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைநதுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பாடசாலையில் பிள்ளையை இறக்கிவிட்டு புதுக்குளம் பகுதியில் இருந்து ஈச்சங்குளம் நோக்கி எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் இருவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளதுடன், ஒருவர் சிறு காயங்குளக்கு உள்ளாகியுள்ளார். இது தொடர்பான விசாரணையை ஈச்சங்குளம் போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.