மும்பை: போலீசார் முன்னிலையில் காவல் நிலையத்திலேயே இளம்பெண் ஒருவர் பீர் குடித்து ரகளை செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த இளம்பெண் சுனிதா யாதவ் கடந்த சில நாட்களுக்கு முன்பு மது அருந்திவிட்டு ஒரு ரெஸ்டாரென்ட் முன்பு தகராறு செய்துள்ளார்.
அப்போது அவர் போதையில் இருந்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க இயலாமல் தவித்த போலீசார், சுனிதாவை காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர். அப்போதும் சுனிதா கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை விடாமல், பீர் அருந்தி ரகளை செய்தார்.
பின்னர் காலையில், தான் செய்த செயலுக்காக மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டு சுனிதா போலீசாரிடம் கெஞ்சியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து போலீசார் ரூ.1,200 அபராதம் விதித்து சுனிதாவை கடுமையாக எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
அரசு டாக்டரை அடித்து உதைத்த நோயாளியின் உறவினர்கள்! (வீடியோ)
உத்தரபிரதேசம் மாநிலம், சீதாபூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையில் உள்ள ஆம்புலன்ஸ் ஒன்று, நோயாளியை ஏற்றிக் கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவமனைக்கு வரவில்லை என தெரிகிறது.
இதனால், ஆத்திரம் அடைந்த நோயாளியின் உறவினர்கள், அவசர பிரிவில் பணியில் இருந்த டாக்டர் அகிலேஷ் சிங்கை அடித்து உதைத்தனர்.
கடந்த 20 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தை கண்டித்தும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து டாக்டர் அகிலேஷ் சி்ங் கூறுகையில், “அடையாளம் தெரியாத நபர்கள் என்னை தாக்கியதை கூட நான் தவறாக நினைக்கவில்லை.
இந்த சம்பவத்தை ஒருவர் வீடியோ எடுத்து அதை வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளார். காவல்துறையினர் என்னை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் சம்பவத்திற்கு தொடர்பில்லாதவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்” என்றார்.