மரணப்படுக்கையில் இருக்கும் மனைவியின் கன்னங்களை வருடியபடி கணவர் பாடிய பாடல், யூடியூபில் வைரலாக பரவி வருகிறது.

இங்கிலாந்தை சேர்ந்த ஹேவார்ட் செரேனொடெட் (93)- லாரா (92) என்ற தம்பதியினர் பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், புற்றுநோயின் தாக்கத்தால் வாழ்வின் இறுதிக்கட்டத்தை நெருங்கிய லாரா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், லாரா தனக்கு மிகவும் பிடித்த காதல் பாடலான “உண்மையான காதலை நீ உணர முடியாது” என்ற பாடலை பாட முடியாமல், அதன் வரிகளை முணுமுணுத்துக் கொண்டிருந்துள்ளார். இதனை கவனித்த கணவர், தனது அன்பு மனைவியின் கன்னங்களை வருடியபடி, கண்ணீர்வடித்துக்கொண்டு அந்த பாடலை பாடியுள்ளார்.

இந்த காட்சியை பார்த்த உறவினர்கள் அப்படியே மெய்சிலிர்த்துப் போயினர். மேலும் பேத்திகளில் ஒருவர் இதனை வீடியோ எடுத்து, ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.

இரண்டாம் உலகப்போரின் போது தனது கணவர் போர்க்களத்தில் இருந்த சமயத்தில், இந்த காதல் பாடலை பாடி, தனது தனிமையை லாரா தனித்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version