கொட்டதெனியாவ, சேயா சதெவ்மி கொலைச் சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரினால் வெளியிடப்பட்ட தகவல்களுக்கு அமைய, அவரை பிரதான சந்தேகநபராகப் பெயரிட நடவடிக்கை எடுத்துள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜயக்கொடி குறிப்பிட்டார்.

கம்பஹா, பெம்முல்ல, பத்துவத்துகொட பகுதியில் மறைந்திருந்த சந்தேகநபர் நேற்றைய தினம் விசேட விசாரணைக் குழுவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

சந்தேகநபர் குறித்து பெண் ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரைக் கைது செய்வதற்காக பொலிஸார் சென்ற வேளையில், அங்கிருந்து அவர் தப்பிச்செல்ல முயன்றுள்ளார்.

30 வயது மதிக்கத்தக்க குறித்த சந்தேகநபர் வழமைக்கு மாறான பழக்கவழக்கங்களைக் கொண்ட நபர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

வேறொரு வழக்கு காரணமாக இந்த நபர் பெம்முல்லயிலிருந்து தப்பிச்சென்று கொட்டதெனியாவ – இங்கம்மாருவ பகுதியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டில் சில காலம் தங்கியுள்ளார்.

அந்த வீட்டிலிருந்து சேயா சதெவ்மியின் வீடு சுமார் ஒன்றரைக் கிலோமீட்டர் தூரத்திலேயே அமைந்துள்ளது.

சிறுமியின் வீட்டிற்கு அருகில் சந்தேகநபர் அடிக்கடி சென்று வந்திருக்கலாம் என பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இக்கொலையின் பின்னர் சந்தேகநபர் இங்கம்மாருவ பகுதியிலிருந்து மீண்டும் பத்துவத்துகொட பகுதிக்குத் தப்பிச் சென்று அங்கு சிறிது காலம் தங்கியிருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் கொட்டதெனியாவையில் பாடசாலை மாணவர் ஒருவரும், மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் இருவரும் சட்ட வைத்திய அதிகாரிகளின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்கள் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜயக்கொடி குறிப்பிட்டார்.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டதை அறிந்த பிரதேசவாசிகள் சேயா சதெவ்மியின் வீட்டிற்கு இன்று முற்பகல் முதல் வருகை தந்த வண்ணமுள்ளனர்.

அங்கிருந்து வெளியேறுமாறு பொலிஸார் அறிவித்த போதிலும், அதனைப் பொருட்படுத்தாது பிரதேசவாசிகள் அங்கு நின்றதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

பிரதான சந்தேக நபரான கொண்டயா குறித்து பெம்முல்ல மக்கள் தெரிவிப்பதாவது:

இவர் கொட்டயா என்னும் பெயரினாலேயே அழைக்கப்பட்டார். இவர் எப்போதும் கஞ்சா அல்லது மதுபானம் அருந்தி குடிபோதையிலுள்ளவர்.

ஏற்கனவே பெம்முல்ல பிரதேசத்தில் இரவு வேளைகளில் உறங்கிக் கொண்டிருந்த 6 வயது மற்றும் 3 வயதான இரண்டு சிறுமிகளை கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்த பின்னர் வயல்வெளியொன்றில் கைவிட்டுச் சென்ற குற்றச்சாட்டிற்காக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டவராவார்.

இவற்றைத் தவிர இரவு வேளைகளில் பெண்கள் நித்திரை செய்வதனை வீடுகளுக்குள் திருட்டுத் தனமாக புகுந்து பார்ப்பதனை இந்த கொண்டயா வழக் கமாக கொண்டிருந்தார்.

அத்துடன், மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டிருந்த பெண்ணொருவரின் சடலத்தையும் இவர் தோண்டி எடுத்து துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

கொண்டயாவின் மூத்த சகோதரி, சிறுமி சேயாவின் இருப்பிடத்துக்கு அண்மையிலுள்ள படல்கம கெஹெல்எல்ல என்கமமாருவ என்ற பிரதேசத்திலேயே வசித்து வந்துள்ளார்.

எனவே இவர் அடிக்கடி தனது மூத்த சகோதரியின் வீட்டிற்கு வந்து சென்றதாக பொலிஸார் நடத்திய விசாரணை மூலம் தெரிய வந்தது.

சேயாவின் கொலை இடம்பெற்ற காலப் பகுதியில் கொண்டயா நீண்ட காலமாக மூத்த சகோதரியின் வீட்டில் தங்கியிருந்து கூலி வேலைக்குசென்று வந்துள்ளார்.

சேயாவின் வீட்டுக்கு அருகில் செல்லும் வீதிக்கூடாகவே இவர் தனது சகோதரியின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.

அச்சந்தர்ப்பங்களில் இந்நபர் சேயா விளையாடுவதனை நோட்டமிட்டு வைத் திருக்க வேண்டுமெனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சிறுமி காணாமற் போனதாக தகவல் வெளியான தினம் முதல் கொண்டயா தனது மூத்த சகோதரியின் வீட்டிலிருந்து தலைமறைவாகியுள்ளார். அதன் பின்னர் இதுவரையில் அவர் சகோதரியின் வீட்டுக்கு வரவில்லை.

பொலிஸார் சேயாவின் வீட்டு அயலவரிடம் பெற்ற வாக்குமூலத்திற்கமைய பொலிஸார் இந்நபர் குறித்து தகவலை யும் திரட்டி வைத்திருந்தனர்.

கொண்டயாவின் அக்காவின் வீட்டி லிருந்து 300 மீற்றர் தொலைவிலிருந்தே சேயாவின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

இந்த கொலைச் சம்பவத்திற்கு பின்னர் கொண்டயா குறித்த காட்டுப் பிரதேசத்திலேயே தலைமறைவாகியிருந்துள்ளார்.

இவர் காட்டுக்குள்ளிருந்த பாழடைந்த வீடு மற்றும் மரங்கள் மீது இருந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் மயானத்தில் பாரிய குழியொன்றை தோண்டி, அதில் இலை குலைகளை இட்டு மறைத்து அதற்குள் வாழ்ந்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர் சுமார் 12 தினங்களாக இவ்வாறு தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார். இவரது தாயாரே இவருக்கு தேவையான உணவு மற்றும் பானங்களை கொண்டு சென்றுள்ளார்.

அவர் செல்லாத நேரங்களில் அயல்வாசிகளின் வீடுகளிலிருந்து சட்டி பானைகளுடன் இவர் உணவுகளை திருடி வந்து உண்டதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

பிரதான சந்தேக நபர் மேல திக விசாரணைகளுக்காக சி. ஐ. டி. யினரி டம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version