சுகயீனமுற்றிருந்த தனது தாயைப் பார்ப்பதற்காக வெலிகம பிரதேசத்திலுள்ள தனது தாயின் வீட்டுக்குச் சென்ற 18 வயதான திருமணமான இளம் பெண்ணின் மார்பகத்தைக் கடித்துக் குதறிய 25 வயதான ஒரு பிள்ளையின் தந்தையான நபர் ஒருவரை வெலிகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நபர் அதே பிரதேசத்தைச் சேர்ந்தவரெனவும் ஹெரோயின் பழக்கத்துக்கு அடிமையானவரெனவும் தெரியவந்துள்ளது.
சம்பவ தினத்தன்று பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது தாயுமே வீட்டில் இருந்துள்ளனர்.
இரவு நாய் தொடர்ந்து குரைக்கவும் தாயும் மகளும் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்துள்ளனர்.
இச்சந்தர்ப்பத்தில் மறைந்து நின்ற சந்தேக நபர் திடீரென பெண்ணின் மீது பாய்ந்து மார்பகத்தை கடித்து குதறியுள்ளார்.
இந்த நபரிடமிருந்து மகளைக் காப்பாற்ற தாய் தடியொன்றை எடுத்து சந்தேக நபரைத் தாக்கியுள்ளார்.
சந்தேக நபர் தப்பிச் செல்ல முயற்சித்த போது தாயும் மகளும் அயலவர்களுடன் சேர்ந்து அந்த நபரைத் தாக்கி பிடிக்க முயற்சித்தபோதும் அந்த நபர் அவர்களின் பிடியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் தாயும் மகளும் வெலிகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து சந்தேக நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது வெலிகம பொலிஸ் நிலைய மகளிர் மற்றும் சிறுவர் பணியக அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.
எட்டு வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை ; தேயிலைச் செடிகளுக்குள்ளிருந்து சடலம் மீட்பு: ஒருவர் கைது
அக்மீமன பிரதேச பாடசாலை ஒன்றில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயிலும் சிறுமியே கொலையுண்டவராவர்.
சிறுமியின் தாய் தேயிலை தோட்டத்தில் தொழில் புரிகின்றார். தந்தை மேசன் தொழில் புரிகின்றார்.
சம்பவ தினம் இவரது சகோதரியுடன் பாடசாலை சென்ற சிறுமி வீடு திரும்பியுள்ளார்.
சகோதரி தனியார் வகுப்பொன்றுக்குச் சென்ற பின்னர் சிறுமி வீட்டில் தனித்திருந்துள்ளார். அதன் போதே அவர் காணாமல் போயுள்ளார்.
தேயிலைத் தோட்டத்திலிருந்து திரும்பிய தாய் இளைய மகளைக் காணாமல் அங்குமிங்கும் தேடியுள்ளார்.
மகளை கண்டுபிடிக்க முடியாமல் போனதையடுத்து அக்மீமன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பின்னர் பொலிஸாரும் கிராமத்தவரும் தேடுதல் நடத்திய போது சிறுமியின் சடலம் அருகிலுள்ள தேயிலைச் செடிகளுக்கு மத்தியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் சடலத்தில் வெள்ளை உள்ளாடை அகற்றப்பட்டு அதில் இரத்தக் கறை காணப்பட்டதாகவும் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் கயிறொன்றும் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் ரொனி என்ற மோப்ப நாயுடன் தேடுதல் நடத்தியபோது நாய் சிறுமியின் வீட்டருகேயுள்ள 27 வயது நபரின் வீட்டுக்குள் சென்று அவரது கட்டிலுக்கருகே நின்றுள்ளது. இதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
– See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=12306#sthash.ENsZw2GW.dpuf