உலகின் மிகப் பெரிய வாகனத் தயா­ரிப்பு நிறு­வ­னங்­களில் ஒன்­றான ஜேர்­ம­னியின் ஃபோக்ஸ்­வாகன் நிறு­வனம் கழி­வு­வாயு வெளி­யேற்றச் சோதனை தொட­ர­பான மோச­டி­யினால் பெரும் சர்ச்­சையில் சிக்­கி­யுள்­ளது.

இதனால் அந்­நி­று­வ­னத்தின் பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரி­யான மார்ட்டின் வின்­டர்கோர்ன் ராஜி­னாமா செய்துள்ளார்.

1230950விற்­பனை அடிப்­ப­டையில் உல கின் முதல்­நிலை வாகனத் தயா­ரிப்பு நிறு­வ­ன­மாக விளங்­கு­வது Volkswagen நிறு­வனம்.

(ஜேர்­ம­னிய மொழியில் V எழுத்தை ஆங்­கில F எழுத்து ஒலி­யாகத் உச்­ச­ரிக்­கப்­படும். எனவே Volkswagen என்­பதை ஃபோக்ஸ்­வாகன் என்­பதே உச்­ச­ரிக்க வேண்டும்.)

இந்­நி­று­வ­னத்­தினால் தயா­ரிக்­கப்­பட்ட சில வகை டீஸல் வாக­னங்­களில் கழி­வு­வாயு வெளி­யேற்றம் தொடர்பிலான சோத­னை­யின்­போது இச்­சோ­தனை பெறு­பேற்றை மோச­டி­யாக மாற்றும் வித­மான கருவியொன்றை மேற்­படி வாக­னங்­களில் ஃபோக்ஸ்­வாகன் நிறு­வனம் இணைத்­தி­ருந்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள் ளது.

சோதனை நிலை­மை­க­ளின்­போது மாத்­திரம் வெளி­யேற்­றப்­படும் வாயுக்­களின் மாசு அளவை குறைத்து காட்டும் வகையில் மோச­டி­யான இந்த ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இத்­த­க­வலை கடந்த வெள்­ளிக்­கி­ழமை அமெ­ரிக்க அதி­கா­ரிகள் அம்­ப­லப்­ப­டுத்­தி­ய­தை­ய­டுத்து பெரும் சர்ச்சை ஏற்­பட்­டது.

தமது டீஸல் வாக­னங்­களில் இந்த சட்­ட­வி­ரோத கரு­வியை பொருத்­தி­யதை ஃபோக்ஸ்­வாகன் நிறு­வனம் ஒப்­புக்­கொண்­டது.

11 மில்­லியன் (1.1கோடி) வாக­னங் களில் இந்த கருவி பொருத்­தப்­பட்­ட­தாக அந்­நி­று­வனம் தெரி­வித்­தது.

Share.
Leave A Reply

Exit mobile version