ilakkiyainfo

விலை உயர்ந்த நகரங்கள் பட்டியலில் சூரிச் மற்றும் ஜெனிவா முதல் இடம்: மெய்சிலிர்க்க வைக்கும் காரணங்கள்

உலகளவில் விலை உயர்ந்த வாழ்வாதார செலவுகளை கொண்டுள்ள நகரங்களின் பட்டியலில் சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் மற்றும் ஜெனிவா நகரங்கள் முதல் இடம் பிடித்துள்ளதாக ஆய்வு தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸில் உள்ள சர்வதேச நிதி சேவைகளை வழங்கும் UBS Group AG என்ற நிறுவனம் அண்மையில் ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில், உலகளவில் விலை உயர்ந்த வாழ்வாதார செலவுகளை கொண்ட நகரங்களின் பட்டியலில் சூரிச் மற்றும் ஜெனிவா நகரங்கள் முதல் இடத்தை பெற்றுள்ளன என குறிப்பிட்டுள்ளது.

இந்த இரண்டு நகரங்களுக்கு அடுத்த இடத்தில் அமெரிக்காவில் உள்ள நியூயோர்க் நகரம் இடம்பெற்றுள்ளது.

சூரிச் நகரில் வசிக்கும் 3 நபர்கள் அடங்கிய ஒரு குடும்பம் ஒரு மாதத்திற்கு 3,600 டொலர்கள் செலவிடுகிறது. ஆனால், இதில் வீட்டு வாடகை அடங்காது.

இதற்கு அடுத்த இடத்தில் ஜெனிவா நகரில் ஒரு குடும்பம் ஒரு மாதத்திற்கு வீட்டு வாடகை இன்றி 3,500 டொலர்கள் செலவிடுகிறது.

web_zurich_seebecken_megateaser1600x900zurich

மூன்றாவது இடத்தில் உள்ள நியூயோர்க் நகரத்தில் வசிக்கும் ஒரு குடும்பம் மாதத்திற்கு 3,340 டொலர்களே செலவிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனினும், வீட்டு வாடகையை சேர்த்தால் நியூயோர்க் நகரம் முதல் இடத்திற்கு முன்னேறுகிறது.

நியூயோர்க் நகரத்தில் உள்ள இரண்டு படுக்கை அறை வசதிகள் கொண்ட ஒரு வீட்டின் வாடகை மற்றும் இதர செலவுகளை மதிப்பிட்டால் மாதத்திற்கு 4,320 டொலர்கள் செலவிடப்படுகிறது.

ஆனால், இதே வசதிகளுடன் சூரிச்சில் உள்ள வீடு ஒன்றின் வாடகை மற்றும் இதர செலவுகளை கணக்கிட்டால் ஒரு குடும்பத்திற்கு சராசரியாக 2,390 டொலர்கள் தேவைப்படுகிறது.

geneve

சூரிச், ஜெனிவா, நியூயோர்க் மற்றும் டோக்கியோ நகரங்களில் சுற்றுப்பயணமாக 2 நபர்கள் ஒரு இரவு தங்கினால், அவர்களின் உணவு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட தேவைகளுக்கு குறைந்தபட்சம் 1,000 டொலர்கள் செலவிட வேண்டும் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

வாழ்வாதார செலவுகள் மிக அதிகமாக உள்ளதால், சூரிச் மற்றும் ஜெனிவாவில் பணிபுரியும் ஊழியர்கள் பிற நாட்டு ஊழியர்களை விட கூடுதலான ஊதியத்தையே பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version