பேஸ்புக் தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தனது தாயை நினைத்து கண்ணீர் சிந்திய காட்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி பேஸ்புக் தலைமை அலுவலகமான மெல்னோ நகரில் அந்நிறுவனத் தலைவர் மார்க் ஜூக்கர் பெர்க்கை நேற்று சந்தித்தார்.

நான்கு சுவர்களுக்குள் இச்சந்திப்பு நடைபெறுவதை விரும்பாத மோடி மக்கள் மத்தியில் மார்க் ஜூக்கர்பெர்க்கரை சந்தித்து பேசினார். இருவருக்கும் இடையேயான இச்சந்திப்பு உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பேஸ்புக் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் பிரதமர் மோடியிடம் பல கேள்விகளை எழுப்பினார்.

மார்க் ஜூக்கர் பெர்க்கின் கேள்வி,

பொதுவாக நாம் இருவரும் குடும்பத்திற்கு முன்னுரிமை அளிப்பவர்கள். அதனால் தான் எனது பெற்றோர்களை இந்நிகழ்ச்சிக்கு அழைத்து வந்துள்ளேன். உங்களது தாய் குறித்த நினைவலைகளை எங்களோடு பகிர்ந்து கொள்வீர்களா?

இந்தக் கேள்வியை மார்க் எழுப்பியதும் பிரதமர் மோடிக்கு கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. நா தளுதளுக்க இந்தக் கேள்விக்கு மோடி பதிலளித்தார்.

அவர் கூறியதாவது,

“என்னைப் பொறுப்புடன் வளர்ப்பதற்காக அவர் உழைக்காத நாளேயில்லை. என் தாய் தான் என் வாழ்வின் ஆக்க சக்தி. சிறிய வயதில், நான் டீ விற்றுக்கொண்டிருந்தேன். இன்று உலகின் மாபெரும் குடியரசின் பிரதமராக வீற்றிருக்கின்றேன் என்றால் அதற்குக் காரணம் என் தாய்தான்”.

“என் தாய்க்கு எழுதப் படிக்கத் தெரியாது, ஆனால் எல்லோரும் படிக்க வேண்டும் என்று சொல்லுவார். தள்ளாத இந்த வயதிலும் தன் வேலைகளைத் தானே பார்த்துக்கொள்வார். தினந்தோறும் செய்திகள் கேட்பார்”.

“என் தாய் மட்டுமல்ல, நம் நாடு முழுவதும் இலட்சக்கணக்கானத் தாய்மார்கள், தங்கள் பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றத் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்து வருகின்றனர்.

அந்தத் தாய்மார்களின் ஆசிர்வாதம் நம் நாட்டிற்குச் சக்தியளிக்கட்டும்”. இவ்வாறு மோடி கூறினார்.

Share.
Leave A Reply

Exit mobile version