கொழும்பு-02, கொம்பனிவீதி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தர்மபால வீதியில் உள்ள தனியார் வங்கிகளில் ஒன்றான சம்பத் வங்கியில் 5.5 மில்லியன் ரூபாய், ஞாயிற்றுக்கிழமை (27) கொள்ளையடிக்கப்பட்டது.

இதுதொடர்பான வீடியோவை, பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவில் இருக்கின்ற நபர் தொடர்பிலான விவரங்கள் தெரியுமாயின் அதுதொடர்பில் கொம்பனிவீதி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தொலைபேசி இலக்கமான 011-2384382 அல்லது கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய குற்ற பிரிவு பொறுப்பதிகாரியின் இலக்கமான 011-2323330 தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் அறிவித்துள்ளது.

முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசத்தை அணிந்து கறுப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதம் தரித்தவரே நேற்றுக் காலை 7.10 க்கு கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசத்தை அணிந்திருந்த ஆயுததாரி, அந்த வங்கியின் பாதுகாப்பு ஊழியர்களை தாக்கிவிட்டு பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

அந்த வங்கி, ஞாயிற்றுக்கிழமை( 27) காலை 7.10க்கு திறக்கப்பட்டுள்ளது. அதன்போது, ஊழியர்கள் எட்டுபேரும் பாதுகாப்பு ஊழியர்கள் நால்வரும் இருந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியே பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் வங்கியின் பாதுகாப்பு கமெரா மற்றும் வங்கிக்கு அண்மையில் உள்ள வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமெராக்கள் ஊடாக விசாரணைக்கள் பொலிஸார் முடுக்கிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

Share.
Leave A Reply

Exit mobile version