ஏமன் நாட்டில் திங்கட்கிழமையன்று ஒரு திருமண நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 131 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என ஐ.நா. தெரிவித்துள்ளது.
ஹௌதி கலகக் குழுவுக்கு எதிராக சவூதி அரேபியா தொடர் தாக்குதல்களை நடத்திவருகிறது.
முன்னதாக 27 பேர் மட்டுமே இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது.
மோசாவுக்கு அருகில் உள்ள ரெட் ஸீ துறைமுகத்திற்கு அருகில் உள்ள கிராமத்தில் இரண்டு குடில்கள் ஏவுகணைகள் மூலம் தாக்கப்பட்டன.
ஹௌதி கலகக் குழுவைச் சேர்ந்தவர் ஒருவருக்கு அங்கு திருமண நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
சவூதி தலைமையிலான கூட்டுப்படையினரின் யுத்த விமானங்களே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக ஏமன் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளர். இது தவறுதலாக நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால், இந்தத் தாக்குதலுக்கு நாங்கள் பொறுப்பல்ல என சவூதி தலைமையிலான கூட்டுப் படையினர் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் கலகப் படையினர் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என அவர்கள் கூறியுள்ளனர்.
மனித உயிர்கள் மீது மதிப்பில்லாமல் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களை ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கண்டித்துள்ளார்.
கடந்த பல மாதங்களாகவே ஏமனிலிருக்கும் அரசுக்கு ஆதரவாக சவூதி தலைமையிலான கூட்டுப்படையினர் ஹௌதி கலகக் குழுவுக்கு ஆதரவானவர்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்றனர்.
அதிர்ச்சி வீடியோ (18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்)
Results of Saudi airstrike on a wedding party in YemenWinning the hearts and minds of it’s neighbors.
Coalition-Saudi air strikes destroy Baraqish the oldest city in Yemen