வவுனியாவில் நேற்று இரவு வர்த்தக நிலையம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

வவுனியா சூசைப்பிள்ளையார் கோவில் வீதியில் அமைந்துள்ள செல்வம் மோட்டோர்ஸ் வர்த்தக நிலையத்திலேயே இக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக வர்த்தக நிலைய உரிமையாளர் கிருபாகரன் எமது ஊடகத்திற்கு கூறுகையில்.

இன்று காலை 08.00 மணிக்கு வர்த்தக நிலையத்தை திறப்பதற்கு வந்த போது எனது கடையின் 08 பூட்டுக்களும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

இது தொடர்பாக பொலிஸிற்கு தகவலை வழங்கியதை அடுத்து அவர்களின் உதவியுடன் 700,000 ரூபா பணம் கொள்ளையிடப்பட்டதை அறியக் கூடியதாக இருந்தது.

மேலும் பல பொருட்கள் களவு போய் இருக்கலாம் என்று கருதினாலும் குற்றவாளிகளின் தடயங்கள் மறைந்து போய்விடுமாகையால் என்னை பொலிஸார் உள்ளே சென்று பார்வையிட அனுமதிக்கவில்லை.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா குற்றப்புலனாய்வு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

unnamed-2229

Share.
Leave A Reply

Exit mobile version