பொதுவாக சுடுகாட்டிற்கு மயானம் என்றுதான் பெயர் வைத்து பார்த்திருக்கிறோம். ஆனால் ஓய்வு அறை என பெயர் வைத்து பார்த்திருக்கிறோமா?
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையத்தை அடுத்த வேமாண்டம்பாளையம் பகுதியில் இருக்கும் ஒரு மயான கட்டடத்திற்கு ஓய்வு அறை என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
அவனுக்கான உண்மையான ஓய்வு என்பது அவனது இறப்புதான். இறப்பிற்கு பிறகு நிரந்தர ஓய்வு எடுக்கும் இந்த இடத்திற்கு ஓய்வு அறை என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது” என்றார்கள்.
மேலும், ”கோபிச்செட்டிப்பாளையம் ஒன்றியத்தில் மொத்தம் பதினேழு ஊராட்சிகள் இருக்கிறது. ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு ஓய்வு அறை (மயானம்) அரசு சார்பில் கட்டித்தரப்பட்டிருக்கிறது.
இப்படி கட்டப்பட்ட ஓய்வு அறைகள் பெரும்பாலும் கிராமப்பகுதியின் குடியிருப்பு பகுதிக்குள் இருக்கிறது. இதற்கு பதிலாக ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒரு மின் மயானம் ஏற்படுத்தியிருந்தால் சுற்றுப்புற சூழல் கெடாமலும், பொதுமக்களுக்கு தொந்தரவு இல்லாமலும் இருந்திருக்கும்” என்கிறார்கள்.
நியாயமான கோரிக்கைதான்… ஆனால், அரசு செய்ய வேண்டுமே!