இணையச் செய்திகளார்களின்  தொல்லை காரணமாக மனஉளைச்சலில் உள்ளதாக புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ள 8ஆவது சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் நீதிவான் சந்தேகநபர்களை நோக்கி “ஏதாவது கூற விரும்புகின்றீர்களா?” என வினவியவேளை மேற்கண்டவாறு சந்தேகநபர் மன்றில் தெரிவித்தார்.

இதனை செவிமடுத்த நீதிவான் “வழக்குடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் ஆயின் தான் தலையிடுவதாகவும், இணையத்தள செய்திகளை எதுவும் செய்ய முடியாது.

அத்துடன் சந்தேக நபரான நீர் விரும்பினால் சிறைச்சாலை அத்தியட்சகர் ஊடாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்ய முடியும்” என தெரிவித்தார்.

மேலும் மரபணு பரிசோதனை அறிக்கையை விரைவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்வதாக வேண்டும் என சந்தேகநபர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் வலியுறுத்தியதை அடுத்து அதனை விரைவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்வதாக உத்தரவிட்டார்.

அத்துடன் நீதிவான் சந்தேகநபர்களிடம் இருந்து மீட்கப்பட்டு மன்றில் உள்ள மாணவி வித்தியாவின் மூக்கு கண்ணாடியை மீளவும் குற்றப்புலனாய்வு பிரிவிடம் மேலதிக விசாரணைக்காக கையளிக்குமாறு உத்தரவிட்டார்.

அடுத்து இவ்வழக்கினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரை ஒத்தி வைத்தார்.

asd12
இவர்கள்  சிறையில் இருக்கிறார்களா? அல்லது  நச்சத்திர விடுதிகளில் தங்கியிருந்து வருகிறார்களா?  சிறையில்  இருக்கும்  குற்றவாளிகள்  போல் தெரியவில்லையே?

Share.
Leave A Reply

Exit mobile version