பிரான்ஸ் நாட்டில் வேலை தேடுகிறேன் என்ற பெயரில் எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் நபர்கள் பெற்றுவரும் அரசு சலுகைகளை உடனடியாக ரத்து செய்யும் புதிய திட்டத்தை அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் வேலை வாய்ப்பு வழங்கும் Pôle emploi என்ற அரசு நிறுவனம் அண்மையில் ஒரு புள்ளிவிபரத்தை வெளியிட்டது.

அதில், பிரான்ஸ் நாட்டின் வரலாற்றில் இல்லாத வகையில் தற்போது சுமார் 5.8 மில்லியன் நபர்கள் வேலை வாய்ப்பு கோரி தங்களுடைய நிறுவனத்தில் பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுருந்தது.

வேலை வாய்ப்பின்மை சதவிகிதம் உயர்விற்கு வேலை தேடு இளைஞர்கள் அதற்கான போதிய முயற்சியை மேற்கொள்ளாமல் இருந்து வருவதே இந்த உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

இது மட்டுமில்லாமல், வேலை தேடும் இளைஞர்கள் வேறு நிறுவனத்தில் பெற்று வந்த ஊதியத்தில் 3-ல் 2 சதவிகிதம் அரசிடமிருந்து நிதியுதவியாக 2 வருடங்களுக்கு பெற்று வருகிறார்கள்.

இதுபோன்ற ஒரு அனுகுமுறையக் அரசு அனுமதிக்க கூடாது என பல விமர்சகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

Banderole comité chômeurs Cgtஆனால், அருகில் உள்ள பிரித்தானியா நாட்டில் இதுபோன்ற அனுகுமுறை கிடையாது. வேலை தேடும் இளைஞர்கள் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வேலை தேடியதற்கான என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது என அந்நாட்டு வேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

மேலும், அடுத்த 6 மாதங்களுக்குள் அவர்கள் ஏதாதவது ஒரு வேலையில் சேரவில்லை என்றால் அவர்களுக்கு அரசு வழங்கி வரும் நிதியுதவி ரத்து செய்யப்படும்.

இதுபோன்ற ஒரு கடுமையான திட்டங்களையும் பிரான்ஸ் அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

அரசுக்கு வலுத்த நெருக்கடியை தொடர்ந்து, வேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனத்திற்கு கீழ் செயல்படும் சுமார் 2,000 ஏஜெண்ட் நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலத்தில் வேலை தேடும் இளைஞர்களை இந்த ஏஜெண்டுகள் கூர்மையாக கண்கானித்து வருவார்கள்.

சரியான முறையில் வேலையை தேடி அடுத்த 6 மாதங்களுக்குள் வேலையில் சேரவில்லை என்றால், அவர்களுக்கு அளிக்கப்படும் அரசு நிதியுதவியை ரத்து செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இந்த புதிய திட்டம் தற்போது Franche-Comte, Poitou-Charentes, மற்றும் Alpes-Cote d’Azur ஆகிய 3 பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இந்த புதிய திட்டம் பிரான்ஸ் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என Pole Emploi தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version