சீனாவில் உள்ள கன்பியூசியஸ் கோவிலில் அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி (Han-style) 6 ஜோடிகள் இணைந்து குழுவாகத் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
தென் சீனாவின் குவாங்சி சுவாங் அட்டோனோமௌஸ் மாகாணத்தில் உள்ள கன்பியூசியஸ் கோவிலில் இந்தத் திருமணம் இடம்பெற்றுள்ளது.
Han என்பது கி.மு 771 ஆம் ஆண்டுகளில் சீனாவில் வாழ்ந்த இனமாகும். இம்மக்களின் பாரம்பரியத் திருமண முறை குழுக்களாக இணைந்து திருமணம் செய்வதே.
கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த பாரம்பரிய முறையிலான திருமணங்கள் சீனாவில் அவ்வப்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.