செக்ஸ், போதை, சாவு… இவை மட்டுமே அந்தத் தீவிரவாதிகளுக்குத் தெரிந்தவை என்று கொதிக்கிறார் ஐ.எஸ். ஐ. எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி வந்த 18 வயது இளம் பெண் ஜினான் (Jinan).
ஈராக்கில் யாஜிதி இனத்தைச் சேர்ந்த இப்பெண், தீவிரவாதிகளின் கோர முகங்களைத் தனது புத்தகத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்.
உலக நாடுகளுக்கு இப்போது மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது ஐ.எஸ்.ஐ.எஸ். (இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா) தீவிரவாதிகள் இயக்கம் தான்.
மதம், இனம் உள்ளிட்டவற்றின் பெயரால் பழைமைவாதிகள், தீவிரவாதிகளாக மாறுவதும் அரசை எதிர்த்து போரிடுவதும் நாடுகளைப் பிடிப்பதும் காலம் காலமாக நடப்பதுதான். ஆனால் அந்த நோக்கத்தைத் தாண்டி அவர்கள் காட்டுமிராண்டித்தனமாகக் கொடூரச் செயல்களில்
ஈடுபடும் போது எந்த விதத்திலும் மக்களின் ஆதரவு கிடைக்காது என்பது நிச்சயம். அப்படித்தான் இப்போது ஐ.எஸ்.தீவிரவாதிகளின் கொடூர முகங்கள் உலகுக்குத் தெரியத் தொடங்கியிருக்கிறது.
இந்தத் தீவிரவாதிகள் சிரியா, ஈராக் நாடுகளில் பல பகுதிகளைக் கைப்பற்றித் தங்கள் ஆளுமைக்குள் கொண்டு வந்து விட்டார்கள். அதேசமயம் சிறுமிக ளைக் கூட விட்டு வைக்கா மல் செக்ஸ் கொடு
மைகள் புரிவதும் செக்ஸ் அடிமைகளாக அவர்களை விற்பதுமாக மிருகத் தனமாக நடந்து கொள்கிறார்கள் அந்த தீவிரவாதிகள். எப்படியோ அவர் களிடம் இருந்து தப்பி வரும் சில பெண்கள் கூறுகின்ற கதைகளைக் கேட்டால் நெஞ்சம் வெடித்து விடும்.
இந்த வரிசையில் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பிவந்த ஜினான் என்ற 18 வயதுப் பெண், தான் சந்தித்த துயரங்களை ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்.
Escaped: Yazidi teenager Jinan (pictured) has told of how she was tortured, abused and beaten by ISIS fighters during her three month captivity in Iraq
ஈராக்கின் வடக்குப் பகுதிகளில் சிறுபான்மையினராக யாஜிதி என்றொரு இனத்தவர் இருக்கிறார்கள். இவர்கள் சூரியனைக் கடவுளின் சின்னமாகக் கருதி வணங்குபவர்கள்.
இந்த இனத்தவரை அந்நாட்டு முஸ்லிம் பழைமை வாதிகள் ஏற்றுக்கொள்வதில்லை. இந்த இனத்தைச் சேர்ந்த பெண் தான் ஜினான்.
2014 ஆம் ஆண்டு துவக்கத்தில் யாஜிதி மக்கள் வசிக்கும் கிராமங் களைக் கைப்பற்றிய ஐ.எஸ்.தீவிரவாதிகள், இங்கு வசித்த யாஜிதி மற்றும் கிறிஸ்தவப் பெண்களையும் சிறுமிகளையும் பிடித்துச் சென்றார்கள்.
அவர்க ளில் ஜினானும் ஒருவர். அதற்குப் பின் அவர் எப்படித் துயரப்பட்டார் என்பதை அவரது புத்தகம் விவரிக்கிறது. அதில் சில பகுதிகளைப் படியுங்கள்.
அந்தத் தீவிரவாதிகள் எங்களை மோசூல் நகருக்குக் கொண்டு சென்று ஒரு வீட்டில் சிறை வைத்தனர். என்னையும் ஒரு கிறிஸ்தவப் பெண்ணையும் ஒரு அறையில் அடைத்து வைத்தனர்.
எங்களை அடித்து உதைத்து துன்புறுத்திய அவர்கள், எலி செத்துக் கிடக்கும் தண்ணீரைக் கொடுத்துக் குடிக்க வைத்தார்கள். எங்களை எல்லாம் செக்ஸ் அடிமைகள் என்று சொன்னார்கள்.
கால்நடைச் சந்தைகள் நடத்துவது போல், சர்வதேச செக்ஸ் அடிமைச் சந்தையை அந்த தீவிரவாதிகள் நடத்துகிறார்கள்.
மோசூல் நகரில் ஒரு அரங்கத்தில் என்னையும் இன்னும் சில பெண்களையும், நிற்க வைத்தார்கள். அங்கு தீவிரவாதிகள் வந்து எங்களை சுற்றி வட்டமாக நின்று கொண்டார்கள். பின்னர் எங்கள் பின்பகுதிகளில் தட்டித்தட்டிச் சத்தமாகச் சிரித்தார்கள். நாங்கள் பீதியுடன் நின்றிருந்தோம்.
அவர்கள் மனிதர்களே அல்லர்.
சந்தையில் நிறுத்தப்படும் ஆடு மாடுகளைப் போல் பெண்களை நிறுத்தி வைக்கிறார்கள். வாங்க வருபவர்கள் பெண்களின் கை கால்களைப் பிடித்து இழுத்துப் பார்க்கிறார்கள்.
அப்படி வாங்க வந்த ஒருவன் ஒரு பெண்ணைக் காட்டி, இதுக்குப் பெரிய மார்பகங்கள் இருக்கின்றன. ஆனால் எனக்கு ஊதா நிறக் கண்கள், வெள்ளைத் தோல், கட்டுடலுடன் இருக்கும் யாஜிதி பெண்தான் தேவை.
அதற்கு எவ்வளவு விலை வேண்டுமானாலும் தருகிறேன் என்றான். இதைவிடக் கொடுமை 14 வயதுச் சிறுமிக்கு உடல் பரிசோதனை எல்லாம் செய்து பார்த்தார்கள் சிலர்.
இரண்டு பேர் சேர்ந்து என்னை விலைக்கு வாங்கினார்கள். அவர்களில் ஒருவன் முன்னாள் பொலிஸ்காரன். இருவரும் என்னை எங்கெங்கோ அழைத்துச் சென்று கடைசியில் ஒரு வீட்டில் தங்க வைத்தார்கள்.
என்னை அடித்து துன்புறுத்தினார்கள். அந்த இருவரில் ஒருவன் பெயர் அபோ ஒமர், இன்னொருவன் பெயர் அமோ அனாஸ். எனக்கு அராபிய மொழி தெரியாது என்று நினைத்து என் முன்பாக அவர்கள் அந்த மொழியில் சகஜமாகப் பேசிக் கொள்வார்கள்.
ஒரு நாள் இரவு அப்படி இருவரும் பேசியதைக்கேட்டு அதிர்ந்து போனேன். செக்ஸ் அடிமைச் சந்தையை ஒரு பெரிய பிசினஸ்போல் விவாதித்தனர்.
சிரியா, துருக்கி அல்லது வளை குடா நாடுகளைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் தலா 3 பெண்கள் வரை வாங்கலாம்.
மற்ற எவருக்கும் 3 பெண்களை விற்க முடியாது என்று ஒருவன் சொன்னான். இந்த பிசினஸ் இப்போது சூடு பிடித்திருக்கிறது. சவூ திக்காரன் நமக்கு வாக னங்கள் கூடத் தருவாகச் சொல்கிறான். இதன் மூலம் தீவிரவாதிகளுக்கு நிறைய நிதி சேரும் என் றான்.
நான் பல வழிகளில்கள் சாவிகளைத் திரட்டி வைத்திருந்தேன். அவற்றின் மூலம் ஒரு நாள் அந்த வீட்டில் இருந்து தப்பி வந்து விட்டேன்.
தீவிரவாதி களிடமும் என்னை விலைக்கு வாங்கியவர்களிடமும் மூன்று மாதம் நான்பட்ட துயரங்களை எடுத்தால் விவரிக்க முடியாது. தீவிரவாதிகள் அடிக்கடி மதுவும் போதைப் பொருளும் எடுத்துக் கொள்கிறார்கள்.
அவர்களுக்குத் தெரிந்தது செக்ஸ், போதை, சாவு ஆகிய மூன்று மட்டும்தான். எப்போதும் எல்லோருக்கும் எதிராக பழிவாங்கும் உணர்வுடனே அவர்கள் இருக்கிறார்கள்.
ஒரு நாள் உலகம் முழுக்க ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆட்சி வரும் என்று அவர்கள் பேசிக்கொள்வார்கள். அப்படியொரு நிலை வந்து விடவே கூடாது.
இப்படியாக அந்தப் புத்தகத்தில் ஜினான் தன் அனுபவங்களை எழுதியி ருக்கிறார். தற்போது ஜினான் தனது கணவருடன் ஈராக் கில் குர்திஸ்தானில் உள்ள அகதிகள் முகாமில் வசிக்கிறார்.
ஜினா னைப் போல் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி வந்த இளம் பெண்கள் பலரும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை இதுபோல விவரித்திருக்கிறார்கள். இதை லண்டனில் இருந்து வெளியாகும் டெய்லி மிரர் பத்திரிகை வெளியிட்டிருக்கிறது.
இளம் பெண்கள்படும் கொடுமைகள் ஒரு புறமிருக்க, வாய் ஜாலங்கள் மூலம் தங்கள் படைக்கு இளைஞர்களை இழுக்கவும் தீவிரவாதிகள் முயற்சிக்கி றார்கள். அதைத் தடுக்க பல நாடுகளும் போராடி வருகின்றன.