இந்திய தூதரக ஏற்பாட்டில் யாழ் இந்துக்கல்லுாரியில் இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜன் தலைமையில் சர்வதேச அகிம்சை தினம் நடைபெற்றுள்ளது. சபாலிங்கம் அரங்கில் இந்த நிகழ்வுஇடம்பெற்றது.
விழாவுக்கு சிறப்பு விருந்தினராக இலங்கை எதிர்கட்சித்தலைவர் இரா சம்பந்தன் அவர்களும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவான் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் தவராசா அவைத்தலைவர் சிவஞானம் நல்லுார் ஆதீன முதல்வர் ஆகியோர் ஒன்றாக கலந்து சிறப்பித்தனர்.
பாடசாலை வாயிலில் இருந்து விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டனர்.அதன் போது ஆரம்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தாவும், சரவணபவனும் மிக அருகாக நின்று நடந்து வந்தனர்.
ஊடகவியலாளர்கள் படம் பிடித்துக்கொண்டிருப்பதை அவதானித்ததும் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவை விட்டு விலகி தள்ளி நடக்க தொடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது .
அகிம்சை வழியை பின்பற்றி வந்த தமிழரசுக் கட்சியின் தலைவர் செல்வநாயகம் போன்ற சத்தியத்தைப் பேணிய தலைவர் வழிகாட்டியிருந்தும்கூட, தமிழ் மக்கள் வன்முறையை ஏன் பின்பற்றினார்கள் என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றது என தனது உரையில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பியிருந்தார்.
மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை உலக நாடுகள் சர்வதேச அகிம்சை தினமாகக் கொண்டாடி வருகின்றன.வன்முறை முடிவுக்கு வந்து, அகிம்சையின் அடிப்படையில் தமிழ் மக்கள் செயற்படத் தொடங்கியிருப்பதன் காரணமாகவே சர்வதேசத்தின் ஆதரவு அதிகளவில் இப்போது கிட்டியிருக்கின்றது என்று சம்பந்தன் இங்கு தெரிவித்துள்ளார்.
இன்றைய (03-10-2016)இலங்கை செய்திகள் முழுமையாக பார்வையிட..