ஹிக்கடுவ, நாரிகம பிரதேச ஹோட்டலொன்றில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணியொருவர் தினசரி நிர்வாணமாக கடற்கரைப் பகுதியில் அலைந்து திரிகின்றமை
அப்பகுதியில் உள்ளோருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அவரின் நடவடிக்கை அப்பகுதிக்கு வரும் சிறுவர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளை முகம்சுளிக்க வைத்துள்ளது.
அச் சுற்றுலாப்பயணி கடந்த ஒருமாத காலமாக ஹோட்டலொன்றில் தங்கியிருப்பதாக ஹோட்டல் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லையெனவும் ,
தானும் பல தடவை இது தொடர்பில் குறித்த நபருக்கு எச்சரிக்கை விடுத்த தாகவும் ஹோட்டல் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.