ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ரஷ்யா கடல்மார்க்கமாக நடத்திய தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே தொடர் தாக்குதல்கள் காரணமாக ரஷ்ய அதிபர் புடினுக்கு அதரவு பெருகியுள்ளது.
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை ரஷ்யா கடந்த வாரம் தொடங்கியது.
இந்நிலையில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் நிலை மீது கடல்மார்க்கமாக நடத்திய தாக்குதல் குறித்து ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் சொய்கு தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.
மேலும் தாக்குதல் தொடர்பான வீடியோவையும் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ஐ.எஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது 900 மைல்கள் தொலைவில் உள்ள காஸ்பியன் கடலில் இருந்து போர் கப்பல்கள் மூலமாக இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவின் வரவு சிரியா அரசுக்கு புது தெம்பை அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த தாக்குதல்களின் மூலம் ரஷ்ய அதிபர் புடினுக்கு திடீரென ஆதரவு பெருகியுள்ளது.
முன்னதாக தாக்குதல் நடைபெற்ற அதே வேளை ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் தனது 63 வது பிறந்த நாளை முன்னிட்டு ஹாக்கி போட்டியில் கலந்து கொண்டு விளையாடிகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.