கிளி­நொச்சி விசு­வ­மடு கூட்டு பாலியல் வல்லு­றவு மற்றும் பாலியல் துஷ்­பிர­யோக வழக்கில் எதி­ரி­க­ளான 4 இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் யாழ்ப்­பாணம் மேல் நீதி­மன்ற நீதி­பதி இளஞ்

­செ­ழியன் 25 ஆண்­டுகள் கடூ­ழிய சிறைத்­தண்­டனை வழங்கி தீர்ப்­ப­ளித்­துள்ளார்.

இரண்டு பிள்­ளை­களின் தாயா­ரா­கிய இளம்­பெண்ணை கூட்­டுப்­பா­லியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­திய குற்றத்திற்காக எதி­ரிகள் நால்­வ­ருக்கும், தலா 20 ஆண்­டுகள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் ஐந்து பிள்­ளை­களின் தாய­ாரா­கிய பெண்ணை அதே சம்­ப­வத்தில் பாலியல் துஷ்பி­ர­யோகம் செய்தமைக்­காக நான்கு எதி­ரி­க­ளுக்கும் இந்தத் தீர்ப்பில் 5 ஆண்­டுகள் கடூ­ழியச் சிறைத்­தண்­டனை விதிக்கப்பட்டுள்­ளது.

மேலும் வல்­லு­ற­வுக்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்ள பெண்­ணுக்கு நட்­ட­ஈ­டாக 5 இலட்ச ரூபாவும், பாலியல் துஷ்பிரயோ­கத்­திற்கு உள்­ளாக்­கப்­பட்ட பெண்­ணுக்கு ஒரு லட்ச ரூபாவும் வழங்க வேண்டும் என்றும் நட்டஈட்டை செலுத்தத் தவ­றும்­பட்­சத்தில் எதி­ரிகள் ஒவ்­வொ­ரு­வரும் 3 வருட கடூ­ழியச் சிறைத்­தண்­டனை அனு­ப­விக்க வேண்டும் எனவும் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் விதிக்­கப்­பட்­டுள்ள தண்­டப்­ப­ணத்தை செலுத்த தவறின் மேலும் இரண்டு வரு­டங்கள் சிறைத்தண்டனையும் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

பண்­டித கெதர சாந்த சுப­சிங்க, பத்­தி­ரண பண்­டா­ர­நா­யக்க பிரி­யந்த குமார, தெல்­கொல்­லாகே தனுஸ்க புஸ்பகுமார, கொப்­பே­வல கெதர தனுஸ்க பிரி­யலால் ரத்­நா­யக்க ஆகிய 4 இரா­ணுவ சிப்­பாய்­க­ளுக்கு இந்த வழக்கில் 5 கூட்­டுப்­பா­லியல் வல்­லு­றவு, பாலியல் துஸ்­பி­ர­யோகம் உள்­ளிட்ட 5 குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்தப்பட்டி­ருந்த நிலையில் தீர்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

இந்த வழக்கு விசா­ர­ணை­யின்­போது, நான்­கா­வது எதிரி மன்றில் ஆஜ­ரா­க­வில்லை. அவர் இல்­லா­ம­லேயே இந்த வழக்கு விசா­ரணை நடை­பெற்று நேற்று புதன்­கி­ழமை தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.

கடந்த 2010 ஆம் ஆண்டு வன்­னிப்­பி­ர­தே­சத்தில் மீள்­கு­டி­யேற்ற நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­த­போது, இரா­ணு­வத்­தி­னரால், விசு­வ­மடு பகு­தியில் இரண்டு குழந்­தை­களின் தாயார் ஒருவர் கூட்­டுப்­பா­லியல் வல்லுறவுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­துடன், 5 பிள்­ளை­களின் தாயார் ஒருவர் பாலியல் துஷ­பி­ர­யோ­கத்­திற்கு உள்ளாக்­கப்­பட்­டி­ருந்தார்.

நள்­ளி­ரவு வேளையில்  பாது­காப்­பற்ற தற்­கா­லிகக் கூடார வீடொன்றில் இடம்­பெற்ற இந்தச் சம்­ப­வத்­தினால் விசு­வ­மடு பிர­தேசம் மட்­டு­மல்­லாமல் கிளி­நொச்சி மாவட்­டத்தின் மீள்­கு­டி­யேற்ற பிர­தே­சமே பெரும் அச்­சத்தில் மூழ்­கி­யி­ருந்­தது.

இந்தச் சம்­ப­வத்தில் விசு­வ­ம­டுவைச் சேர்ந்த 27 வய­து­டைய 2 குழந்­தை­களின் தாயார் ஒரு­வரை கூட்டுப்பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­ய­தா­கவும், மற்­று­மொரு பெண்­ணா­கிய 5 குழந்­தை­களின் தாயாரை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­த­தா­கவும் குற்றம் சுமத்தி சட்­டமா அதிபர் 4 இரா­ணு­வத்­தி­ன­ருக்கு எதி­ராக யாழ்ப்­பாணம் மேல் நீதி­மன்­றத்தில் வழக்கு தாக்கல் செய்­தி­ருந்தார்.

விசு­வ­மடு பிர­தேச இரா­ணுவ முகாமில் கட­மை­யாற்­றி­யி­ருந்த, பண்­டித கெதர சாந்த சுப­சிங்க, பத்­தி­ரண பண்டார­நா­யக்க பிரி­யந்த குமார, தெல்­கொல்­லாகே தனுஸ்க புஸ்­ப­கு­மார, கொப்­பே­வல கெதர தனுஸ்க பிரியலால் ரத்­நா­யக்க ஆகிய 4 இரா­ணுவ சிப்­பாய்­க­ளுக்கு இந்த வழக்கில் 5 கூட்­டுப்­பா­லியல் வல்­லு­றவு, பாலியல் துஸ்­பி­ர­யோகம் உள்­ளிட்ட 5 குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டி­ருந்­தன.

இந்த வழக்கு விசா­ர­ணை­யின்­போது, நான்­கா­வது எதிரி மன்றில் ஆஜ­ரா­க­வில்லை. அவர் இல்­லா­ம­லேயே இந்த வழக்கு விசா­ரணை நடை­பெற்று நேற்று புதன்­கி­ழமை தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.

வழக்கு விசா­ர­ணையின் முடிவில் 81 பக்­கங்­களைக் கொண்ட தனது தீர்ப்பை நீதி­பதி இளஞ்­செ­ழியன் ஒரு மணித்தி­யாலம் பகி­ரங்க நீதி­மன்­றத்தில் வாசித்தார்.

குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்த 4 இரா­ணுவ சிப்­பாய்­களும் விசார­ணையில் குற்­ற­வா­ளி­க­ளாகக் காணப்பட்டிருப்பதாகத் தெரி­வித்து, அவர்கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் மொத்த­மாக 30 ஆண்­டுகள் கடூ­ழியச் சிறைத் தண்­டனை வழங்­கு­வ­தாக தனது தீர்ப்பில் தெரி­வித்தார்.

அதே­நேரம், கூட்­டுப்­பா­லியல் வல்­லு­ற­வுக்கு 25 ஆயிரம் தண்­டப்­ப­ணமும், பாலியல் துஸ்­பி­ர­யோ­கத்­திற்கு 10 ஆயிரம் ரூபா தண்­டப்­ப­ணமும் செலுத்த வேண்டும் என்றும் தவ­றும்­பட்­சத்தில் எதி­ரிகள் 2 வரு­டங்கள் கடூ­ழியச் சிறைத் தண்­டனை அனு­ப­விக்க வேண்டும் என தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

இதன்­படி, இந்த வழக்கின் எதி­ரிகள் நால்­வ­ருக்கும் கூட்­டுப்­பா­லியல் வல்­லு­ற­வுக்கு 20 வரு­டங்­களும், பாலியல் துஸ்­பி­ர­யோ­கத்­திற்கு 5 வரு­டங்­களும், நட்­ட­ஈடு வழங்­கா­விட்டால் 3 வரு­டங்­களும், தண்­டப்­பணம் செலுத்தாவிட்டால் 2 வரு­டங்­க­ளு­மாக மொத்­த­மாக 30 வருட கடூ­ழியச் சிறைத் தண்­டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்­டுள்­ளது.

இந்த வழக்கின் நீண்ட தீர்ப்பில் நீதி­பதி இளஞ்­செ­ழியன் முக்­கி­ய­மாக தெரி­வித்­துள்­ள­தா­வது:

இந்த வழக்கில் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள எதி­ரி­க­ளான 4 இரா­ணுவச் சிப்­பாய்­களும் இரண்டு தாய்­மாரை, கூட்டுப்பா­லியல் வல்­லு­ற­வுக்கும், பாலியல் துஸ்­பி­ர­யோ­கத்­திற்கும் உட்­ப­டுத்­திய குற்­றத்தைப் புரிந்­துள்­ளனர் என்­பது விச­ர­ரணை மூலம் நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது.

கூட்டு வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட பெண் தன்­மீது குற்றம் புரி­யப்­பட்­ட­போது, இறுதி நேரம் வரையில் அவர்களைத் தடுத்துப் போரா­டி­யி­ருக்­கின்றார் என்­பதும் விசா­ர­ணை­களில் நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது.

அதே­போன்று, மற்ற பெண் மீது பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்­டமை ஒப்­பு­றுதி சாட்­சி­யங்­களின் மூலம் நிரூ­ப­ண­மா­கி­யி­ருக்­கின்­றது.

கூட்டு வல்­லு­ற­வுக்கு உள்­ளாக்­கப்­பட்ட பெண்ணின் சாட்­சி­யத்தை மன்று விசேட கவ­னத்­திற்கு எடுத்­துள்­ளது.

பாதிக்­கப்­பட்ட பெண் தனது சாட்­சி­யத்தில்

‘சம்­பவம் நடை­பெற்ற அன்று இரவு 12 மணிக்கு வீட்­டி­னுள்ளே புகுந்த இரா­ணு­வத்­தினர் கொட்­டானால் முழங்காலில் அடித்­தார்கள். அவர்கள் கையில் கிறிஸ் கத்தி வைத்­தி­ருந்­தார்கள். அப்­போது அருகில் படுத்திருந்த பிள்கைள் எழுந்து கத்­தி­னார்கள்.

பயம் கார­ண­மாகக் கத்­திய அந்தப் பிள்­ளை­க­ளையும் அவர்கள் அடித்­தார்கள். அவ்­வாறு அவர்கள் கத்­திக்­கொண்டு எனது பக்­கத்தில் வந்­த­போது, இரா­ணு­வத்­தினர் எனது உடலைச் சுரண்டி, என்னைப் பிடித்து இழுத்­தார்கள்.

அப்­போது எங்­க­ளுடன் இருந்த எனது தம்பி ரஞ்சித், அக்கா பாவம் அவரை அப்­படி ஒன்றும் செய்ய வேண்டாம் என கத்­தினான்.

அப்­போது, அந்த இரா­ணு­வத்­தினர் அவ­னு­டைய கழுத்தைச் சவட்டி, அதனை முறித்­த­மா­தி­ரி­யாக, அவனை இழுத்துச் செனறு அவ­னு­டைய கைகளைக் கட்­டு­வ­தற்­காக கொடிக்­க­யிற்றைப் பிடித்து அறுத்­தார்கள்.

அவ்­வாறு அவ­னு­டைய கைகளைக் கட்­டு­வ­தற்கு முற்­பட்­ட­போது, எங்கள் எல்­லோ­ரையும் அவர்கள் கொலை செய்யப் போகின்­றார்கள் என்று பயந்தேன். அந்தப் பயத்தில் என்னைப் பிடித்­துக்­கொண்­டி­ருந்த ஆமியைத் தள்ளி­விட்டு வெளியில் ஓடினேன்.

அவ்­வாறு ஓடி­ய­போது, எனது பின் மண்­டையில் அடி விழுந்­தது. அதே­நேரம் 3 இரா­ணு­வத்­தினர் என்னைப் பிடித்து வீட்டின் பின்னால் உள்ள பற்­றைக்குள் கொண்டு சென்­றார்கள்.

அவ­வாறு கொண்டு சென்­ற­போது என்னால் முடிந்த மட்டும் அவர்­க­ளி­ட­மி­ருந்து தப்­பு­வ­தற்கு முயற்­சித்தேன் முடி­ய­வில்லை.

அங்கு வைத்து அவர்கள் என்னைக் கற்­ப­ழித்­தார்கள். அவர்­களே இந்த நீதி­மன்­றத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள்’ என அந்தப் பெண் தனது சாட்­சி­யத்தில் தெரி­வித்து, எதி­ரி­களை அடை­யாளம் காட்டினார்.

அதே­போன்று பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட பெண் சாட்­சி­ய­ம­ளி­கையில், ‘என்னை ஒரு­பக்­க­மா­கவும், மற்­ற­வரை மறு­பக்­கத்­திலும் இரா­ணு­வத்­தினர் இழுத்துச் சென்­றார்கள்.

நான் 5 குழந்­தை­களின் தாய் என்னை ஒன்றும் செய்ய வேண்டாம் என அவர்­க­ளிடம் அழு­த­படி கெஞ்­சினேன். அவர்கள் எனது உடை­களை பகு­தி­யாகக் களைந்­தார்கள்.

எனக்கு மாத­வி­லக்கு என்னை ஒன்றும் செய்ய வேண்டாம் என அப்­போது அவர்­க­ளிடம் நான் சொன்னேன். அவர்கள் எனது உள்­ளா­டை­களைக் கழற்றி பார்த்­தார்கள். பார்த்த பின்னர், எனது கைகளைக் கட்டி கீழே தள்­ளி­விட்­டார்கள்.

அப்­போது சுமார் 20 மீற்றர் தூரத்தில் என்னை விடுங்கோ என்னை விடுங்கோ என மற்ற பெண் கத்­திக்­கொண்­டி­ருந்தார். அவர் அவ்­வாறு கத்த, கத்த வீட்டின் பின்னால் இருந்த மற்ற காணிக்குள் அவரை அவர்கள் இழுத்துச் சென்­றார்கள்’ என தெரி­வித்­துள்ளார்.

மக்­க­ளையும் நாட்­டையும் பாது­காக்கச் சென்ற காவ­லர்­களே குற்றம் புரிந்­துள்­ளார்கள்.

இந்த வழக்கில் எதி­ரி­க­ளாக நிறுத்­தப்­பட்­டி­ருப்­ப­வர்கள் இரா­ணுவச் சிப்­பாய்­க­ளாவர். இவர்கள் இந்தச் சம்­பவம் நடை­பெற்ற காலப்­ப­கு­தியில், கிளி­நொச்சி விசு­வ­மடு பிர­தே­சத்தில் நாட்டின் பாது­காப்­பையும் பொது­மக்­களின் பாது­காப்­பையும் உறு­திப்­ப­டுத்தும் பாது­காப்பு நட­வ­டிக்­கைக்­காக, இரா­ணுவ உத்­தி­யோ­கத்­தர்­க­ளாக கட­மைக்­காக அர­சாங்­கத்­தினால் அனுப்­பப்­பட்­டி­ருந்­தார்கள்.

அவ்­வா­றாக தேசிய பாது­காப்பு கட­மைக்­காக அனுப்­பப்­பட்­டி­ருந்­த­போதே, இவர்கள் தங்­க­ளு­டைய இரா­ணுவ முகாமில் இருந்து வெளி­யேறிச் சென்று, கூட்­டுப்­பா­லியல் மற்றும் பாலியல் துஸ்­பி­ர­யோகக் குற்­றச்­செ­யலைப் புரிந்­தி­ருக்­கின்­றார்கள்.

இந்தக் குற்றச் செயல் சம்­பவம் நடை­பெற்­ற­தை­ய­டுத்து, சம்­பவம் தொடர்­பாக விசா­ரணை செய்த இரா­ணுவ பொலிசார் இவர்கள் நான்கு பேரையும் அன்று அதி­கா­லை­யி­லேயே கைது செய்­தி­ருந்தார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் நாட்டின் கோர யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர் அனைத்­தையும் இழந்து இரா­ம­நாதன் இடம்­பெயர் அகதி முகாமில் தஞ்­ச­ம­டைந்­தி­ருந்­து­விட்டு, அர­சாங்­கமும், இரா­ணு­வத்­தி­னரும் வழங்­கிய மீள்­கு­டி­யேற்­றத்­திற்­கான வாக்­கு­று­தியை அடுத்து, இந்தப் பெண்கள் தமது செர்­நத ஊரான விசுவமடுவுக்குத் திரும்பிச் சென்று தற்­கா­லிகக் கொட்டில் அமைத்து, அதில் தங்­கி­யி­ருந்து தங்­க­ளு­டைய காணி­களைத் துப்­ப­ரவு செய்­வதில் ஈடு­பட்­டி­ருந்த வேளையில் இரவு 12 மணிக்கு அவர்கள் தங்­கி­யி­ருந்த வீட்டினுள்ளே புகுந்து, இந்தக் குற்றச் செயலைப் புரிந்­தி­ருக்­கின்­றார்கள்.

இந்தச் செயலின் மூலம், யுத்தம் நடை­பெற்­ற­போது, காப்­பாற்­றப்­பட்­டி­ருந்த அந்தப் பெண்­களின் கற்­பையும் மானத்­தையும் யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர், இந்த 4 இரா­ணுவ சிப்­பாய்­களும் சூறை­யா­டி­யி­ருக்­கின்­றார்கள். கோர யுத்­தத்தில் பாது­காக்­கப்­பட்ட மானம் 2010 ஜுன் 6 ஆம் திகதி யுத்தம் இல்­லாத சூழ் நிலையில் எதி­ரி­க­ளான இரா­ணுவ சிப்­பாய்­க­ளினால் பறிக்­கப்­பட்­டி­ருப்­பது பாரிய குற்றச் செய­லாகும்.

பொது மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய தமது அரச கடமையாகிய பாதுகாப்பை வழங்காமல் இரண்டு தாய்மார்கள் மீது கூட்டுப் பாலியல் வல்லறவு மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் செய்தது என்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

அது மட்டுமல்லாமல், இந்த நாட்டு இரராணுவத்தினரின் நற்பெயரைக் கெடுத்த செயலாகும். எனவே, இலங்கை இராணுவத்தின் கௌரவத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இராணுவத்தின் பாலியல் வல்லுறவு குற்றம் என்பது சர்வதேச குற்றம், அத்துடன் அது ஒரு போர்க் குற்றம், மனித நேயத்திற்கு எதிரான குற்றம் என ஐநா யுத்த குற்ற நீதிமன்ற சட்டங்களிலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சடடங்களிலும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட போது யாழ் மேல் நீதிமன்றம் பொதுமக்களினால் நிறைந்து வழிந்தது. தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து, எதிரிகள் நான்கு பேரும் உடனடியாக, பாதுகாப்பாக சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றக் கட்டிடத்தின் முதலாம் மாடியில் அதிரடிப்படை பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். நீதிபதி இளஞ்செழியனுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

Share.
Leave A Reply

Exit mobile version