நியூயார்க்: அன்பை வெளிப்படுத்த நேரம் காலம் பார்க்க முடியாது என்பதை உணர்த்தியிருக்கிறாள் ஒரு சிறுமி.
அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில், கொலராடோ ஸ்ப்ரிங்ஸ் பகுதியில் ஒன்பது மாதமாக ராணுவப் பயிற்சிக்காக மத்திய கிழக்கு நாடான குவைத் சென்றிருந்த வீரர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒரு வீரரின் மகள் ஒன்பது மாதங்களாக பார்க்காத தந்தையைப் பார்த்ததும், ராணுவ விதிகளையெல்லாம் மீறி, ஓடிப்போய் தனது தந்தையை கட்டியணைத்துக்கொண்டார்.
சுமார் 300 வீரர்கள், குவைத் நாட்டில் பயிற்சிக்கு சென்றிருந்தனர். அவர்களின் குடும்பத்தினர், கூடி வீரர்களை வரவேற்கக் காத்திருந்த வேளையில், எதையும் கண்டுகொள்ளாது தந்தையை நோக்கி ஓடிய சிறுமி அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டாள். அன்பிற்கு அடைக்கும் தாழ் உண்டோ!
அப்பா வந்தாச்சு.. குட்டிப்பையனும் நாயும் ஒரே மாதிரி காட்டிய ரியாக்ஷன் : (வீடியோ)
நடனத்தில் பின்னி பெடலெடுக்கும் மனிதர்…. ஹீரோக்கள் பின் தங்கிருவாங்க போல!…