சுவிஸ் வந்த மாவை சேனாதிராஜாவிடம்,  சுவிஸ் வாழ் தமிழன் ஒருவன்  கடும்கேள்விகள் தொடுத்ததாகவும்,
முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஐயா அவர்கள் இலங்கையில் இன அழிப்பு நிகழ்ந்தது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.

ஆனால் சுவிசில் உள்ள பேர்ன் மாநிலம் வந்த சுமந்திரன் அப்படி இலங்கையில் நடக்கவில்லை என்று கூறினார். இதற்கு உங்கள் பதில் என்ன?? அனந்தியை ஏன் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவில்லை? என பலவேறுபட்ட கேள்விகள்  கேட்கப்பட்டபோது..

சரியாக பதில் அளிக்கமுடியாத மாவையார் “நீர் யார் தம்பி  இதைப்பற்றி கேட்க? என பதில்கேள்வி கேட்டதால்  கூட்டத்தில் கலந்துகொண்ட சிலர்  மாவையார்  மீது  பாய்ந்ததாகவும்,  இதனால்  கூட்டத்தை பாதியில் நிறுத்தி பின் கதவால்  மாவையார் தப்பி ஓடியதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சிங்கள அரசுடன் சேர்ந்து  அரசியல்  பிழைப்பு நடத்தும்  தமிழரசுக் கட்சியினரான “சுமந்திரன், மாவை, சிறிதரன்… போன்றோர் மீது  புலம்பெயர்  தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வலுத்துவருகிறது.

இனிவரும் காலங்களில் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து  கூட்டமைப்பினர்கள் காசு பிழைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

ஐநா முன்றலில் சுமந்திரனை வழிமறித்து கடித்துக், குதறிய புலபெயர் தமிழ் மகன்!! -(வீடியோ)

Share.
Leave A Reply

Exit mobile version