உலகெங்கும் வாழும்
தமிழ் மக்களின்
உயிர் நாடியை
உறைய வைததுவிட்டது
இவளின் மரணம்!!

உன்னதமான
மனிதபிறப்பில் -இவள்
உச்சம் தலையில்
உச்சிமோர்ந்து பார்க்க
ஆசைப்பட்ட தமிழர்கள்
ஏராளம…ஏராளம்!

எண்ணற்ற  தமிழர்களின்
நெஞ்சங்களில்..
கலகலப்பூட்டியவள்
கடைசி நேரத்தில்
எமையெல்லாம்
கண்கலங்க வைத்துவிட்டாளே..

தமிழ் மக்களை சிரிக்க வைத்தவருக்கு பின்னால் மறைந்திருக்கும் சோகம்!

தமிழ் சினிமாவையும் ஆச்சியையும் பிரித்து பார்த்து விட முடியாது. அவர் நடிக்காத கேரக்டர் இல்லை. பேசாத வசனம் இல்லை. அவரது நகைச்சுவையை பார்த்து சிரிக்காத மனிதர்களும் இல்லை.

தமிழ் மக்கள் அத்தனை பேரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்த, மனோரமாவின் சொந்த வாழ்க்கை சோகம் நிறைந்ததாகவேதான் இருந்தது.

mano1

பள்ளிக்கூடம் படிக்கும் காலத்தில் இருந்தே நாடகத்தில் நடிக்கத் தொடங்கிய மனோரமா, ஆரம்ப காலத்தில் வாங்கிய சம்பளம் 10 ரூபாய். பின்னர் அவர் ஆயிரக்கணக்கில் சம்பளம் வங்கிய   நாடக நடிகையாக இருந்த காலத்தில், தன்னுடன் நடித்த எஸ்.எம். ராமநாதனை  திருமணம் செய்தார்.

திருச்செந்தூர் கோயிலில் வைத்து இருவருக்கும் திருமணம் நடந்தது. மனோரமாவுக்காக சாட்சி கையெழுத்து போட்டவர், இவர் அண்ணனாக கருதிய சக நடிகரான கிருஷ்ண மூர்த்தி என்பவர்.

1964 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் நடைபெற்றது. அதற்கு பின்,குழந்தை பெற்றுக்கொள்ள சொந்த ஊரான பள்ளத்தூருக்கு  மனோரமா சென்றார். குழந்தையும் பிறந்தது. அந்த குழந்தைக்கு பூபதி என்ற பெயர் சூட்டப்பட்டது.

குழந்தை பிறந்த பின் 16 நாள் கழித்து மனோராமாவின் கணவர் எஸ்.எம். ராமநாதன் வந்து பார்த்து சென்றார். அதற்கு பின், அவர் மனோரமாவையும், குழந்தையையும் பார்க்கவே வரவில்லை.

தொடர்ந்து மனோரமா சினிமாவில் நடிக்க ஆரம்பித்த சமயத்தில் அவருக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. இவரிடம் இருந்து ஒதுங்கத் தொடங்கிய கணவர்,  விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

மனோரமா எந்த நிர்ப்பந்தமும் அளிக்கவில்லை. தன்னை அவருக்கு பிடிக்கவில்லை போலும் என்று கருதி  1966 ஆம் ஆண்டு விவகாரத்து பெற்று பிரிந்து விட்டார்.

இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், மனோரமாவை விவாகரத்து செய்து விட்டு எஸ்.எம். ராமநாதன் இன்னொருவரை திருமணம் செய்து கொண்டார்.

மனோராமாவின் திருமணத்துக்கு சாட்சி கையெழுத்து போட்ட சக நடிகர் கிருஷ்ணமூர்த்தியின் தங்கையைதான் எஸ்.எம். ராமநாதன் 2வதாக திருமணம் செய்தார். ஆனால் இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.

சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு,  நடிப்பு நடிப்பு என்று சினிமாவையே தனது வாழ்க்கையாக தேர்வு செய்து கொண்டார் மனோரமா, கோடி கோடியாகவும் சம்பாதித்தார்.

அவரது கணவர் எஸ்.எம். ராமநாதன் இறந்த போது, நடிகை மனோரமாவுக்கு தகவல் கொடுத்தனர். கணவரோட இறப்புக்கு போகக் கூடாது என்று மனோரமாவின் தாய் தடுத்து பார்த்தார்.

ஆனால் அதனை மனோரமா ஏற்றுக் கொள்ளவில்லை. இறுதிச்சடங்குக்கு தனது மகன் பூபதியுடன் சென்று அவருக்கு கொள்ளி  போடவும் வைத்தார்.

இத்தகைய பெருந்தன்மையான குணங்களால்தான் தமிழகத்தின் ஆச்சியாக மனோரமா உயர்ந்து நிற்கிறார்.

Share.
Leave A Reply

Exit mobile version