ஏறாவூர் -சவுக்கடி கடலில் கடந்த இரு தினங்களில் மீனவர் இருவரின் கரை (இழுவை) வலைகளில் சுமார் இருபதாயிரம் கிலோ கிராம் எடைகொண்ட ஆயிரத்தைந்நூறு மஞ்சற்பாரை மீன்கள் சிக்கியுள்ளன.
இந்த மீன்கள் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியானவை என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை பார்வையிட பலர் கடற்கரையில் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏறாவூரைச் சேர்ந்த என்.எம்.எம். ஷபீக் மற்றும் எஸ். சுதாகரன் ஆகியோரது இழுவை வலைகளிலே இவ்வாறு அதிகளவான மீன்கள் பிடிக்கப்பட்டிருந்தது.