கொத்மலை, கட்டுக்கித்துலை, ஹெல்பொட தோட்டத்தில் முச்சக்கரவண்டி ஒன்றில் சிறுமி ஒருவரின் பாடசாலை சீருடை, உள்ளாடை, பாதணிகளுடன் இளைஞர் ஒருவர் இருந்ததை கண்ட பிரதேசவாசிகள் குறித்த இளைஞனை மடக்கிப் பிடித்துள்ளனர்.
பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்ட இளைஞர் புஸல்லாவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
காட்டுப்பகுதிக்குள் ஓடியதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிரதேசவாசிகளிடம் மாட்டிக்கொண்ட இளைஞன் சிறுமி குறித்து எந்தத் தகவலையும் வழங்கவில்லை.
இதேவேளை சிறுமியொருவர் தேயிலை மலைக்குள் ஓடி ஓளிந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
சந்தேக நபரான இளைஞர் சிறுமி தொடர்பில் எதுவும் கூறாததால் பிரதேசவாசிகள் குழப்ப நிலை அடைந்தனர். இதனையடுத்து பிடிபட்ட இளைஞர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இது இவ்வாறு இருக்க சந்தேக நபரை பொலிஸார் குறித்த இடத்திலிருந்து அழைத்துச் செல்ல முற்பட்டபோது அதற்கு மக்கள் சம்மதிக்காததினால் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.