போர்க்குற்றச்சாட்டில் இருந்து படையினரைக் காப்பாற்ற சிறிலங்கா அரசு நடவடிக்கை: பொதுமன்னிப்புக்கு பரிந்துரை

champika-ranawaka-300x200

போர்க்  குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் சிறிலங்காப் படையினர் சார்பில் வாதிடுவதற்கான சட்டவாளரை நியமித்து, அவர்களுக்கான சட்ட செலவுகள் அனைத்தையும் சிறிலங்கா அரசாங்கமே, ஏற்றுக் கொள்ளவுள்ளதாக, அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா படை அதிகாரிகளிடம் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதற்காக வாக்குறுதியை அவர் கொடுத்துள்ளார்.

ஐ.நா விசாரணை அறிக்கை தொடர்பாக, சிறிலங்கா படை அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் பொறுப்பு அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து அவர், சிறிலங்கா படை அதிகாரிகளுக்கு ஐ.நா விநாரணை அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பாகவும், அவை பற்றிய சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்தும் விளக்கமளித்துள்ளார்.

இதன்போதே, போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் படையினருக்கான சட்ட செலவுகள் அனைத்தையும், சிறிலங்கா அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும் என்றும், அவர்களின் சார்பில் சட்டவாளரை நியமிக்கும் என்றும், சம்பிக்க ரணவக்க உறுதியளித்துள்ளார்.

அதேவேளை, போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் படையினர் உண்மை நல்லிணக்க ஆணைக் குழு முன்னிலையில், ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கலாம் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அத்தகைய ஒரு வழக்கு, மதத்தலைவர்களை உள்ளடக்கிய கருணைச் சபை முன் வரும் போது,அவருக்கு பொதுமன்னிப்புக்கு பரிந்துரை செய்ய முடியும். (பொதுமன்னிப்பு. இதுதான் படையினருக்கு கிடைக்கப்போகும் தண்டனை)

வெளிநாட்டுப் பங்களிப்புடன் கூடிய விசாரணைப் பொறிமுறையை எவ்வாறு உருவாக்குவது என்று, எல்லாப் பங்காளர்களுடனும் கலந்துரையாடிய பின்னரே வெளிப்படுத்தப்படும்.

இத்தகைய ஆலோசனைகளை வரும் ஜனவரிக்குள் முடிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இது கலப்பு விசாரணை அல்ல. நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு வெளிநாட்டு நிபுணர்களின் உதவ எமக்குத் தேவை.

எவ்வாறாயினும், சிறப்பு சபை ஒன்றே இறுதியான தீர்மானத்தை எடுக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

“சம்பந்தன்-சுமந்திரன் – ரணில்-சிறிசேனா” கூட்டணி தேசிய அரசாங்கத்தினால் தமிழர்களுக்கு கிடைக்கப்போகும் நன்மைகள் என்ன தெரியுமா?  

1. முள்ளிவாய்காலில்  மாண்டுபோன மக்கள்  மாண்டுபோனதாகவே கைகழுவி விடப்படப்போகின்றார்கள்.

2. குற்றம் செய்த படையினர்களுக்கு “பொதுமன்னிப்பு”.   ஆனால்  குற்றம் செய்த தமிழர்கள் ( முன்னாள் புலிகள் ) கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கபடப்போகின்றார்கள் (அதற்கு முன்னுதாரணம்தான் பிள்ளையானின் கைது.  பிள்ளையானின்  கைதையிட்டு புலியாதரவாளர்கள் மட்டும் சந்தோசப்பட்டுக்கொள்ளவேண்டியதுதான்.)

3. எற்கனவே குற்றம் செய்ததாக, சந்தேகத்தின் பெயரில்  பயங்கரவாத  தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்  தமிழர்களில் (முடமாக்கப்பட்ட  அல்லது பலவருடங்கள் சிறையில் வாடி,  மரணத்தை  எதிர்நோக்கியுள்ள) சிலருக்கு  மட்டும் பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

இது ஏன் தெரியுமா?  இந்த  பொது மன்னிப்பு விடயத்தை காட்டிதான் படையினருக்கும்  பொதுமன்னிப்பு வழங்கப்படப்போகிறது.

4.போர் முடிந்த கையோடு  வெளிநாடுகளுக்கு தப்பி வந்து, நிம்மதியாக வாழக்கை நடத்திக்கொண்டிருக்கும்    புலிகளும்  வெகுவிரைவில்  கைதுசெய்யபட்டு  இலங்கைக்கு கொண்டுசெல்லப்படப்போகிறார்கள்.

(குற்றம்செய்த பலர் வெளிநாடுகளில் போய்,  சுகபோக வாழ்க்கை வாழந்துகொண்டிருக்கிறார்கள்.  போர் முடிந்து 7வருடமாகியும், அவர்களை ஏன் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என  எதிர்க்கட்சி (அரச ஆதரவுக்கட்சி) தலைவர் சம்பந்தனே  பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார் என்பதுதான்  இங்கு கவலைக்குரிய  விடயம்.

ஆனால்…,  குற்றம் செய்த இராணுவத்தினர்களை ஏன் இதுவரை கைதுசெய்யாமல் உள்ளீாகள் என்றோ, அல்லது போர் முடிந்து 7வருடமாகிவிட்டது சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது  என்பது பற்றியோ  சம்பந்தன்  பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பவில்லை.)

இப்படி பல விடயங்கள் தமிழர்களை  மட்டும் குறிவைத்து “உள்ளகப்பொறி முறை”யை நடைமுறைப்படுத்த போகின்றோம்   என்ற போர்வையில்   முதல்விடயமாக  நடைபெறப்போகின்றது.

அரசாங்கத்தின் இச்செயல்பாடுகளுக்கு முழுமையான   அனுசரணை  வழங்குபவர்கள் யார் தெரியுமா? கீழே உள்ள படத்தில காணப்படுகின்ற.. “கோட்-சூட் ” அணிந்த தமிழ் அரசியல் வாதிகள்தான்.

சம்பந்தன், சுமந்திரன்,  சேனாதிராஜா, சிறிதரன், அடைக்கலநான்….

அரச ஆதரவுக்கட்சி தலைவர் சம்பந்தனார் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியது இதுதான்:  முழுமையான அறிக்கை பார்வையிடுங்கள்

ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்தவரை கைது செய்யாதது ஏன்?

தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை உட்பட பல்வேறு மோசமான குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட குற்றவாளிகள் பலர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.

அவ்வாறானவர் களைக் கைது செய்வதற்கும், யுத்தம் முடிந்த பின்னரும் சுமார் 7 வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர்களை விடுவிப்பதற்கும் புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் (08-10-2015) கோரிக்கை விடுத்தார்.

ஜோசப் பரராஜசிங்கத்தை படு கொலைசெய்த நபர் யார் என்ற தகவலை கடந்த அரசாங்கத்துக்கு பெயர் விபரங்களுடன் வழங்கிய போதும் அவர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்று வெளிநாட்டில் வசித்து வருகிறார்.

இவரைக் கைது செய்வதற்கு புதிய அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் அவர் கேள்வி யெழுப்பினார்.

குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழான கட்டளைகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார். கடந்த காலத்தில் பாரிய மோசடிகளுடன் தொடர்புபட்டவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாடுகளில்

சொகுசாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களைக் கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுப்பதுடன், யுத்தம் முடிவடைந்து 7 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளபோதும் இன்னமும் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அப்பாவி தமிழ் இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடுத்துவைக்கப்பட்டுள்ள இளைஞர்களின் விடுதலையை சட்டரீதியாக நோக்காமல் நடைமுறைச்சாத்தியமான முறையில் அணுகி அவர்களின் விடுதலையைத் துரிதப்படுத்துவதற்கு நீதியமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இந்த இளம் சமூகத்தினர் துரிதமாக விடுவிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்படவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனது நண்பரான ஜோசப் பரராஜ சிங்கத்தை மட்டக்களப்புக்குச் செல்ல வேண்டாம் என நான் எச்சரித்திருந்தேன். இருந்தபோதும் அவர் கிறிஸ்மஸ் ஆராதனைகளில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றார்.

அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திய நபர் யார் என்பது குறித்து நாம் கடந்த அரசாங்கத்திடம் பெயர் விபரங்களுடன் வழங்கினோம்.

ஆனால் அவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக அந்த நபர் வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்று தற்பொழுது வெளிநாட்டில் சொகுசாக வாழ்ந்து வருகின்றார்.

இதுபோன்று பல குற்றவாளிகள் பொதுநலவாய நாடுகள் உட்பட பல வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் தொடர்பில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.

இது எவ்வாறான குற்றச் செயல்களுக்கு உதவியளிக்கப்படவுள்ளது என்பது தொடர்பில் தெளிவுஇல்லை. பொது நலவாய நாடுகளில் மறைந்திருக்கும் குற்றவாளிகளை கைதுசெய்வதற்கு எவ்வாறான நடவடிக்கை எடுக்க முடியும் என்பதையும் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version