ஒரு பெண்ணை கவர்ச்சியாக காட்டுவது அவளது மார்பகங்கள் தான் என்ற கருத்து பரவலாக காணப்படுகிறது. அது இயற்கையின் ஒரு படைப்பு தான் என்ற எண்ணத்தில் பார்த்தால் ஆண்களின் பாலியல் இச்சைக்கு பெண்கள் இரையாகமாட்டார்கள்.

ஆனால், அதனை மீறியும் இந்த உலகத்தில் அரங்கேறும் பாலியல் பிரச்சனைகளுக்கு யாரை குறை கூறுவது?

ஐ.நாவை சேர்ந்த இங்கிலாந்து தேசிய பெண்கள் குழு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் மார்பகங்கள் ஆண்களை கவரும் வகையில் கவர்ச்சியாக வளரக்கூடாது என்பதற்காக, சூடான கற்கள், பெரிய கட்டைகள் போன்றவற்றை பயன்படுத்தி மார்பகங்கள் மீது சூடு வைக்கின்றனர் (மார்பக சலவை சடங்கு).

(A girl’s chest being flattened with an umbilical belt)

மேலும், மார்பகங்கள் கடினமான பெல்ட் கொண்டும் கட்டப்படுகிறது, தற்போது இது போன்ற அபத்தமான செயல்களால் உலகளவில் 3.8 மில்லியன் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

குறிப்பாக, கெமரூன், நைஜீரியா, தென் ஆப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் இதுபோன்ற தவறுகள் அதிகமாக காணப்படுகிறது.

அதிகமாக 58 சதவீதம் தாய்மார்களால் தங்கள் குழந்தைகளுக்கு இது போன்ற தவறுகள் இழைக்கப்படுகிறது.

(A girl’s breasts being ironed with a spade in Cameroon)

இவ்வாறு செய்யும் தாய்மார்கள், தங்கள் குழந்தைகளுக்கு நன்மை செய்வதாகவே கருதுகின்றனர், ஏனெனில் தங்களது குழந்தைகள் எவ்வித இன்னல்களுக்கும் ஆளாகாமல் பள்ளிப்படிப்பையாவது முடிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.

இதுகுறித்து FGM(Female Genital Mutilation) அமைப்பை சேர்ந்த ஆர்வலர் Leyla Hussein கூறுகையில், பெண்களின் உடல்கள் அவர்களின் இயல்பான நிலையில் பேணிக்காக்கப்படுவதும், ஒரு ஆண் தனது சொந்த ஆசைகளை கட்டுப்படுத்த முடியாமலும் இருக்கின்ற ஒரு அபத்தமான உலகின் நாம் வாழ்கின்றோம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

A stone used for breast ironing is being heated on a fire (Picture: Reuters)

பெண்களின் மார்பகங்களை இவ்வாறு செய்வதால், மார்பக புற்று நோய், இரத்த கட்டிகள், தொற்று, நீர்கட்டிகள், மார்பகங்களை இழத்தல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும் என்ற விபரீதத்தை பெற்றோர்கள் புரிந்துகொள்ளவில்லை என்று இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version