பஸ் சாரதி ஒருவரை கொலை செய்ய மறுத்தமைக்காக 12 வயதான மாணவன் ஒருவனை பாதாள உலகக் குழுவினர் 135 மீற்றர் உயரமான பாலமொன்றிலிருந்து வீசிய சம்பவம் கௌத்தமாலாவில் இடம்பெற்றுள்ளது.
மத்திய அமெரிக்க நாடான கௌத்தமாலாவின் தலைநகர் கௌத்தமாலா சிற்றியை சேர்ந்த ஏஞ்சல் ஏரியல் எஸ்கலன்ட் பெரெஸ் (Angel Ariel Escalante Perez, 12 ) எனும் சிறுவனே இவ்வாறு வீசப்பட்டான்.
படுகாயத்துடன் அவன் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதிலும் 15 நாட்களின்பின் உயிரிழந்துள்ளான.
சாரதியை கொல்வதற்கு மறுத்தால், அச்சிறுவனை கொல்லப் போவதாகவும் அக்குழுவினர் அச்சுறுத்தினர்.
இதற்காக கத்தியால் குத்தி கொல்லப்படுவதையோ அல்லது பாலத்திலிருந்த வீசி எறியப்பட்டு கொல்லப்படுவதையோ தெரிவுசெய்துகொள்ளலாம் என அக்குழுவினர் கூறினர்.
ஏஞ்சல் ஏரியல் எஸ்கலன்ட் பெரெஸின் தந்தையும் ஒரு பஸ் சாரதியாவார். இதனால் இன்னொரு பஸ் சாரதியை கொல்வதற்கு அவன் விரும்ப வில்லை.
தன்னைக் கொல்வதென்றால் பாலத்திலிருந்து வீசிக் கொல்லும்படி அவன் கூறினான்.
Angel Ariel Escalante Perez’ father found him just before he died
எனினும், அடர்த்தியான தாவர இலைகளுக்கு மேல் வீழ்ந்த அவன் படுகாயங்களுடன் உயிர்தப்பினான்.
அச்சிறுவனை தேடிய அவனின் குடும்பத்தினர் 72 மணித்தியாலங்களின் பின் பாலத்தின் அடியிலிருந்து அவனை கண்டுபிடித்தனர்.
பின்னர் அவன் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் 15 நாட்களின் பின் அச்சிறுவன் உயிரிழந்தான்.