இதயம் பலவீனமா இருக்குறவங்க இத பார்க்காதீங்க – காண்பவர்களை அச்சுறுத்தும் தாய்லாந்து சைவ திருவிழா !!(Extreme piercings at Phuket vegetarian festival in Thailand, in pictures)
தாய்லாந்தில் சந்திர விழாவின் கடைசி நாளினை முன்னிட்டு பக்தர்கள் தங்கள் உடல்களை வருத்தி நேர்த்திக்கடனை நிறைவேற்றியுள்ளனர்.
தாய்லாந்தில் ஃபுகெட் பகுதியில் அமைந்துள்ள Samkong கோவிலில் 9 நாட்கள் கொண்டாடப்படும் சந்திரவிழா சிறப்பு பூஜைகளுடன் முடிவடைந்துள்ளது.
சீனத்து காலண்டரின் அடிப்படையில் கொண்டாடப்படும் இந்த விழாவில் நூற்றுக்கணக்கான ஆண்கள் கலந்துகொண்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளனர்.
தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் கலந்துகொண்டால் தங்களது உடம்பில் குடிகொண்டிருக்கும் தீய ஆவிகள் அனைத்தும் விட்டு விலகும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
இந்த விழாவின் முக்கிய அம்சமாக பக்தர்கள் தங்களது கன்னங்களில் பல்வேறு கூரான பொருட்களால் துளைத்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
விழா நடைபெறும் 9 நாட்களும் பக்தர் புலால் ஒதுக்கி வெறும் சைவ உணவு மட்டுமே எடுத்துக்கொள்கின்றனர்.
இந்த விழாவில் கலந்துகொண்டு அலகுகுத்தி நேர்த்திக்கடன் செலுத்துவதால் தங்களுக்கு மன அமைதியும் பூரண ஆரோக்கியமும் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
1800-ம் ஆண்டில் இருந்தே ஃபுகெட் பகுதியில் புலால் ஒதுக்கி விரதமிருந்து நேர்த்திக்கடன் செலுத்தும் விழா கொண்டாடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.