பிஞ்சு குழந்தைக்கு மது மற்றும் புகை பழக்கத்தை கற்றுக்கொடுக்கும் நபரின் செயல் தொடர்பான வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரொமெனியாவை சேர்ந்த டெனியல் தெக்கு Daniel Tecu என்பவரால் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள இந்த வீடியோவில், ரொமெனிய மனிதர் ஒருவர் தனது அருகில் உள்ள குழந்தையின் வாயில் சிகரெட்டை வைத்து புகைக்க வைக்கிறார்

அடுத்ததாக, குழந்தை அதுவாகவே அருகில் மதுபானத்தை எடுத்து அருந்துகின்றது.

மீண்டும் அந்த நபர் குழந்தைக்கு சிகரெட்டை புகைக்க தருவது போல் வீடியோ அமைந்துள்ளது.

சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வரும் இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களின் எதிர்ப்பையும் அதிர்ச்சியையும் பதிவு செய்துள்ளனர்.

மேலும் அந்த நபர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

child_smoke_002

Share.
Leave A Reply

Exit mobile version