புற்றுநோயால் சாவைத் தழுவிய விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்) யின் வித்துடல் இன்று பிற்பகல் பரந்தன், கோரக்கன்கட்டு மயானத்தில் விதைக்கப்பட்டது.

thamilini-funeral-2முன்னதாக, பரந்தன், சிவபுரத்தில் உள்ள தமிழினியின் இல்லத்தில், பெருமளவு பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இல்லத்தில் நடந்த இறுதிக்கிரியைகளை அடுத்து, இறுதி வணக்கக் கூட்டம் எழுத்தாளர் வெற்றிச்செல்வியின் தலைமையில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், வடமாகாண முதலமைச்சர் சார்பில் அமைச்சர் ஐங்கரநேசன், வட மாகாண அமைச்சர் குருகுலராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்மினி சிதம்பரநாதன், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

இதையடுத்து,தமிழினியின் வித்துடன், பேரணியாக கோரக்கன்கட்டு மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது கணவன், இறுதிக் கிரியைகளை மேற்கொண்ட பின்னர், வித்துடல் விதைக்கப்பட்டது.

Share.
Leave A Reply

Exit mobile version