இந்தியாவில் அனைத்து மதங்களும் அவர்களின் சடங்குகளும் புனிதமாக கருதப்படுகிறது. சில சடங்குகள் நடைபெறுவதற்கு தெள்ளத் தெளிவான காரணங்கள் இருந்தாலும், பழங்காலத்து பழக்கவழக்கமாக இருந்து வருவதால் மட்டுமே சில சடங்குகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அப்படிப்பட்ட சடங்குகளில் புகழ் பெற்ற ஒரு சடங்கு தான் – கொல்கத்தாவில் விலைமாதர் இல்லத்தில் இருந்து எடுத்து வரும் மண்ணில் துர்கை அம்மன் சிலைகளை செய்வது.
தசராவிற்கு முந்தைய புனிதமான ஒன்பது நாட்களை வணராத்திரியாக கொண்டாடுகிறது வட இந்தியாவும் மேற்கு இந்தியாவும். கிழக்கில் இதனை துர்கா பூஜையாக கொண்டாடுகின்றனர்
சமூகத்தின் பாசாங்குத்தனம்
பெண்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துதல், சமூகத்தை விட்டு ஒதுக்கி வைத்தல், எப்போது பார்த்தாலும் அவமரியாதையாக நடத்தி அவமானப்படுத்துதல் போன்றவைகள் எல்லாம் வெளிப்படையாக நடந்து வருகிறது.
ஆனால், நவராத்திரியின் போது மட்டும் பெண்களை புனிதமாக கருதி வழிப்படுவதை என்னவென்று சொல்வது; பாசாங்கத்தின் உச்சமல்லவா? இதில் மோசமான அளவில் பாதிக்கப்படுவது சமூகத்தின் ஒரு அங்கமான விலைமாதர்கள்.
தன் வாழ்நாள் முழுவதும் அவர்கள் வசைப்பாடப்பட்டு வந்தாலும் கூட, நவராத்திரியின் போது ஒவ்வொரு தனி நபரும் வாசலில் நின்று, அவர்களை புன்னகையுடன் கெஞ்சுவார்கள்.
விலைமாதர் இடத்திலிருந்து எடுக்கப்படும் மண்
இந்து மத மரபின் படி, துர்க்கை சிலையை தயார் செய்ய அதிமுக்கியம் வாய்ந்த நான்கு விஷயங்கள் வேண்டும் – கங்கை நதிக்கரையின் மணல், மாட்டு கோமியம், மாட்டு சாணம் மற்றும் விலைமாதரின் இடத்திலிருந்து மண். மொத்தமாக இந்த கலவை துர்க்கை அம்மனின் புனித சிலையாக உருவெடுக்கும்.
விலைமாதர் இடத்திலிருந்து எடுக்கப்படும் மண் இல்லாமல் இந்த சிலை முழுமை பெற்றதாக கருதப்பட மாட்டாது.
இந்த மரபு ஆண்டாண்டு காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இது ஏன் ஆரம்பித்தது என்பதற்கான சரியான காரணம் இன்னமும் தெரியவில்லை.
நீ கொடுப்பதையே நீ பெறுகிறாய்
‘புண்ய மாட்டி’ என்ற இந்த மண்ணை எடுப்பதற்கான காரணங்களையும் வழிகளையும் தான் இப்போது பார்க்க போகிறோம். விலைமாதர் இருக்கும் இடத்தில் இருந்து மண் எடுப்பதற்கான வழிமுறை புனிதமானதாகும்.
அதே சமயம் அது நாடகத்தனமாகவும் இருக்கும். கோவிலில் உள்ள அர்ச்சகர் விபச்சாரம் நடக்கும் இடத்தில் அல்லது விலைமாதர் வீட்டிற்கு சென்று, துர்க்கை அம்மன் சிலைக்கு மண் கேட்டு கெஞ்ச வேண்டும்.
அவர்கள் மண் கொடுக்கும் போது, அர்ச்சகர்கள் வேத மந்திரங்களை ஓதுவார்கள். அவர்கள் மறுத்தாலும் கூட, மண்ணிற்காக அர்ச்சகர் கெஞ்சிக் கொண்டே இருக்க வேண்டும்.
குமொர்துளி
காலத்தின் மாற்றத்தில் அர்ச்சகர்கள் மட்டுமல்லாது சிலைகள் வடிப்பவர்கள் கூட புனிதமான மண்ணிற்காக விலைமாதர் வீட்டிற்கு செல்கிறார்கள். கொல்கத்தாவில் உள்ள குமொர்துளி என்பது பாரம்பரியம் மிக்க குயவர் நிலமாகும்.
இங்கே களிமண்ணில் செய்யப்பட்ட கடவுள்களின் சிலைகள் எண்ணிலடங்கா அளவில் தயார் செய்யப்பட்டு, திருவிழாக்கள் மற்றும் ஏற்றுமதி காரணங்களுக்காக பயன்படுத்தப்படும்.
இணையதளத்தில் நன்றாக அலசிய பின்னரும், கொல்கத்தாவில் உள்ள நண்பர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களிடம் விசாரித்து, இந்த சடங்குக்கான பின்னணியில் உள்ள காரணங்கள் ஆராயப்பட்டுள்ளது.
புண்ய மாட்டி
பல நம்பிக்கையாளர்கள் மற்றும் இணையதள பிளாக்கர்களின் படி, விலைமாதர் இடத்தில் இருந்து எடுக்கப்படும் மண் புனிதமானதாகும். அதற்கு காரணம் இந்த இடத்திற்கு வருகை தருபவர்களின் நற்குணம் மற்றும் தூய்மையை இங்குள்ள மண் கொண்டிருக்கும்.
எப்போதெல்லாம் ஒரு ஆண் விலைமாதரிடம் வருகிறானோ, அப்போதெல்லாம் தன்னுடைய தூய்மையையும் நற்குணத்தையும் அவளின் வாசலில் விட்டுச் செல்கிறான்.
அதனால் அவர்களின் வீட்டில் தூய்மை குவிந்து கொண்டே இருக்கும். அதனால் துர்கா மா மூர்த்திக்கு ‘புண்ய மாட்டி’ என்பது தவிர்க்க முடியாத கூறாக உள்ளது.
ஆற்றலின் மறுவடிவம்
சில இந்து மத அர்ச்சகர்களின் படி, துர்க்கை அம்மனுக்கும் மகிஷாசுரனுக்கும் இடையேயான சண்டைக்கு முன்பாக, மகிஷாசுரன் அம்மனின் கண்ணியத்திற்கு தீங்கு இழைக்க நினைத்து, மானபங்கத்திற்கு முயற்சித்தான்.
இந்த அவமதிப்பால் கோபம் கொண்ட துர்க்கை அம்மன், தன்னுடைய மொத்த சக்தியையும் பயன்படுத்தி, பெண்ணை இழிவாக நினைத்த மகிஷாசுரனை அழித்தார்.
இந்த காரணத்திற்காக தான், விலைமாதர் வீடு வாசலில் உள்ள மண் பயன்படுத்தப்படுகிறது. அப்படிச் செய்வதால் சமூகத்தால் அவமரியாதைக்குக்கு ஆளாகியுள்ள அத்தகைய பெண்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.
அவர்களின் பாவங்களைக் கழித்தல்
தங்களின் வாழ்வை வாழ்வதற்கு தாங்கள் தேர்ந்தெடுத்த பாதை ஒரு பாவம் என்று நம்பப்படுவதால், அவர்களின் இடத்தில் இருந்து துர்க்கை அம்மன் சிலை செய்வதற்கு மண் எடுப்பது, அவர்களை தூய்மைப்படுத்தும். மேலும் அந்த மண்ணை அவர்கள் அர்ச்சகரிடம் கொடுக்கும் போது, அர்ச்சகர்கள் மந்திரங்கள் ஓதுவதால், விலைமாதர்களின் ஆன்மாக்களின் பாரம் இறங்கும்.
நம் அனைவரில் இருந்து தான் கடவுள்; நம் அனைவருக்காக தான் கடவுள்
சமூகத்தால் ஒதுக்கப்பட்ட பிரிவாக கருதப்படும் விலைமாதர்கள் கடவுளின் பக்தர்களாக கருதப்படும் போது ஒரே குடையின் கீழ் வருகிறார்கள் என சிலர் கூறுகிறார்கள்.
அதனால் அவர்கள் சமூகத்துடன் சேர்க்கப்படுகிறார்கள். வருடத்தில் மற்ற நேரத்தில் சமூகத்தால் அவர்கள் இழிவுப்படுத்தப்படுவதை போல் அல்லாமல், இந்நேரத்தில் அவர்கள் நல்ல முறையில் நடத்தப்பட்டு, துர்க்கை பூஜை அனைத்திற்கும் வரவேற்கப்படுவார்கள்.
இதில் சோகம் என்னவென்றால் இந்த பாசாங்குத்தனம் நம் காலத்தில் கூட இன்னமும் நீடிக்கிறது.